வியாழன், 8 செப்டம்பர், 2016

மூலிகை . பிண மனிதர்கள்

 உடலை விட்டு ஆவியாக செல்லும் ஒரு ஜீவனுக்கும் (மரணம் அடையும் ஜீவன்)பிணத்திற்கும் இடையே உள்ள மின்காந்த 

இணைப்பு மிக மெல்லியதாகி விட்டது.அதனால்தான் பிணத்திற்கு என்ன பாதிப்பு ஏற்ப்பட்டாலும் ஆவிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

அது மூன்றாவது உடலை பார்ப்பது போலத்தான் தன் உடலை பார்க்கிறது.


ஆப்பிரிக்காவில் ஹைடி என்னும் இடத்தில் பொகார் என்னும் மந்திரவாதிகள் இருக்கிறார்கள். 

அவர்கள் இறந்து போன மனிதர்களின் பிணத்தை எடுத்து சில மூலிகைகள் மூலம் அவர்களை  

உயிர்ப்பித்து தங்கள் விருப்பப்படி இயக்குவார்கள்.

அந்த பிண மனிதர்களை கொண்டு தங்கள் விருப்பப்படி எல்லாம் மிக கடினமான காரியங்களை  

எல்லாம் செய்து கொள்வார்கள்.

எப்படி பிணத்தை இயக்குகிறார்கள்?என்றால் இந்த முறையில்தான்..

இறந்துபோன மனிதர்களின் மூலாதாரத்தில் உள்ள பாஸ்பரஸ் ஆக்சைடை அதிகரிக்கும் வண்ணமாக பாஸ்பரஸ் தனிமம் அதிகம் உள்ள மூலிகைகளை கொண்டும்,பிராணன்(மின்காந்த சக்தி) அதிகம் உள்ள மூலிகைகள் கொண்டும் அரைத்து மூலாதாரத்தில் தடவுவார்கள்.

உடல் முழுக்க பிராணாசக்தி அதிகம் உள்ள மூலிகைகளை அரைத்து தடவுவர்.ஆனால் நெற்றிப்பொட்டில் மட்டும் பிட்யூட்டரி (புத்தி) இயங்ககூடாது என்று அங்கு மட்டும் மூலிகைகளை தடவ மாட்டார்கள்.பின் பிராணா சக்தியை கவர்ந்து இழுக்கக்கூடிய சில ஊடு மந்திரங்கள் மூலம் பிராணா சக்தியை கவர்ந்து இழுத்து பிண மனிதருக்கு செலுத்துவர்.

பிராணா சக்தியின் காரணமாகவும் ,பாஸ்பரஸ் மூலிகைகள் காரணமாகவும் இவரது ஆழ்மனம் விழிப்படையும்.அதாவது ஆவிகள் உலகில் குறைந்த பிராண உடலில் இயங்கி கொண்டிருக்கும் ஆழ்மனம் (பாஸ்பரஸ் ஆக்சைடு)ஆனது இவர்களது செயலால் உடலில் ஈர்க்கப்பட்டு அடர் பாஸ்பரஸ் ஆக்சைடாக ஸ்தூல உடலில் வெளிப்பட்டு ஸ்தூல உடலில் இயங்கும்.

பிணத்தின் உடலில் பிராணனை அதிகரித்தால் ஆழ்மன மானது உடலுடன் ஒன்றிவிடும்.அதாவது ஆழ்மனம் ஆவி உடலுக்கும் பிணத்துக்கும் இடையே ஒரு மின்காந்த இணைப்பு சங்கிலி எப்போதுமே இருந்து கொண்டுதான் இருக்கும்.

மின்காந்த சங்கிலி இணைப்பு அறுபடுவது கிடையாது.பிணத்தை முழுமையாக எரித்தால் தான் அந்த இணைப்பு போகும்,இணைப்பு அறுபடும்.

உடலை விட்டு ஆவியாக செல்லும் ஒரு ஜீவனுக்கும் (மரணம் அடையும் ஜீவன்)பிணத்திற்கும் இடையே உள்ள மின்காந்த இணைப்பு மிக மெல்லியதாகி விட்டது.அதனால்தான் பிணத்திற்கு என்ன பாதிப்பு ஏற்ப்பட்டாலும் ஆவிக்கு எந்த பாதிப்பும் இல்லை.அது மூன்றாவது உடலை பார்ப்பது போலத்தான் தன் உடலை பார்க்கிறது.

இந்த மின்காந்த இணைப்புகள் மிக மிக மெல்லியதாக ஆகிவிட்டதால்தான் அந்த ஜீவனால் உடலை இயக்க முடியவில்லை.உடலுக்குள் புக முடியவில்லை.அதுவே இந்த தாந்திரீக முறைகள் மூலம் அந்த பிராண இணைப்பை நல்ல வலுவாக ஆக்கிவிட்டால் அந்த ஆழ்மனம் ஜீவன் உடலில் ஈர்க்கப்பட்டு இயங்க ஆரம்பித்துவிடும்.அப்போது அவர்களது ஆழ்மனம் ஏற்கனவே பதிவாகி உள்ள எண்ணப்பதிவின் படி செயல்படுவர்.

ஆனால் மந்திரவாதிகள் அவர்களை கட்டளை மூலம் சஜக்ஷன் மூலம் தங்கள் விருப்பபடி செயல்பட வேண்டும் என்று அவர்களது மனதை ஹிப்னாடிஷம் செய்துவிடுவர்.அந்த பிண மனிதர்களும் மந்திரவாதிகளின் கட்டளைப்படி செயல்பட ஆரம்பிப்பர்.ஆனால் அந்த மனிதர்களுக்கு உணவில் உப்பு போட்டு கொடுத்தால் அந்த பிண மனித்ர்கள் செயல்பட மாட்டார்கள்.

காரணம் உப்பு தண்ணீரில் உள்ள எல்லாவிதமான தனிமங்களையும் வெளியேற்றும் அல்லது வீரியத்தை குறைக்கும் தன்மை கொண்டது.

அதனால் பிணமனிதர்களின் உடலில் இயங்கிகொண்டிருக்கும் பாஸ்பரஸ் தனிமத்தை அது குறைப்பதால் பிண மனிதர்கள் மந்திரவாதியின் கட்டுபாட்டை இழக்கிறார்கள்.மீண்டும் பிணமாகவே ஆகிவிடுவார்கள்.

இப்படி ஒரு மனிதனில் புத்தியாகிய அடர் நைட்ரஜன் ஆக்சைடை இயக்காமல் அவர்களது ஆழ்மனமான சாயா புத்தியை (நைட்ரஜன் ஆக்சைடுNO)இயக்கி அவர்களை பயன்படுத்த முடியும்.

கோமாவில் இருப்பவரை கூட இது போன்று பிண மனிதராக நடமாட வைக்க முடியும்.இது உண்மை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக