வெள்ளி, 23 செப்டம்பர், 2016

சூட்சுமத்தை உணர்த்த ஒரு குட்டி கதை

ராமர் சீதை இணைந்த  பிற்கு ராம பக்த அனுமன் தினசரி மாலை சேது கரையில் ராமரை நினைத்து தொழுது பின்பு சேதுவை ஒரு பிரதட்சினமாக பறந்து வருவது வழக்கம்.  

அப்படி ஒரு நாள் செய்து கொண்டு இருக்கும் பொழுது சனீஸ்வரர்  அந்த வழியாக வந்தார்.அதை கவனிகாது தன் பூஜையில் கண்ணும் கருத்துமாக இருந்தார் அனுமன். தான் வருகையில் அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துவார்கள் ஆனால் இந்த குரங்கு நம்மை அவமதிக்கிறதே என சனிக்கு கோவம் வரவே அனுமனை தன்னிடம் சண்டையிட்டு ஜெயிக்கும்படி அழைத்தார்.  

ஆனால் அனுமனோ தான் பூஜை முடித்து ராம சேதுவை சுற்றி வர வேண்டும், அதனால் அதற்கெல்லாம் நேரமில்லை என மறுத்தும் சனி பிடிவாதமாக வற்புறுத்தி கொண்டே இருந்ததால், அனுமன் தன் வாலால் சனியை சுழற்றி அழுத்தி கொண்டு சேதுவை சுற்றி பறக்க ஆரம்பித்தார். வழியில் மலைகள், குன்றுகள்,மரங்கள் என அனைத்திலும் சனி அடிபட்டு அனுமனின் பிடியில் இருந்து விடுபட முடியாமல் பின்பு மன்னிப்பு கேட்டு விடுபட்டு கொண்டார்.  

விடுபட்ட சனிக்கு உடல் முழுதும் ரத்தம் மற்றும் காயங்கள், வலி. அதை கண்ட அனுமன் அவருக்கு கடுகு  எண்னை கொடுத்து உடம்பில் தேய்க்க  சொல்ல, தேய்த்த   சனிக்கு உடனடி குணம் கிடைத்தது. உடனே அனுமனுக்கு நன்றி கூறி அன்று முதல் "இந்த எண்னை எனக்கு ப்ரீதி செய்தது ஆகவே யார் கடுகு எண்ணையை சனிக்கிழமைகளில் தானமாக கொடுக்கிறார்களோ அவர்களுடய மன,உடல் வலிகளை  போக்குவேன். என உறுதி அளித்தார் சனி.

.இது இதிகாசம்.இது மட்டுமில்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களும் கடுகு எண்னைக்கு உண்டு.ஆகவே நல்ல பலன் நிச்சயம் உண்டு. மேலும் கருப்பு உளுந்து,வெல்லம் சனிக்கு ப்ரீதியானது. ஆகவே தான் உளுந்தை ஊர வைத்து குரங்குக்கு கொடுக்க சொல்வது.அனுமனிடம் நேரடியாக கொடுக்க முடியாதல்லவா ?

யாம் கொடுக்கும் ஒவ்வொரு பரிகாரமும் மிகுந்த பலன் வாய்ந்தவையும், சக்தி மிக்கதும் ஆகும். நேரமின்மை காரணமாக ஒவ்வொரு விசயத்திற்கும் முழு விவரங்கள் கொடுக்க இயலுவதில்லை.நம்பிக்கையுடன் செய்தால் பலன் நிச்சயம்.!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக