வியாழன், 19 ஜூலை, 2018

அஷ்டகர்ம மூலிகைகள்


அஷ்டகர்ம மூலிகைகள் அறுபத்தி நான்கு :

ஆகும். இந்த அஷ்ட கர்ம செயல்களை பற்றி விரிவாக காணலாம்.பண்டைய காலத்தில் வாழ்ந்து பல அற்புதங்களை செய்த நம் தமிழக சித்தர்கள் மூலிகைகளை கொண்டே மந்திர உருவேற்றி பல காரியங்களில் வெற்றியடைந்தனர். அதன்படி அவர்கள் பயன்படுத்திய மூலிகைகள் அஷ்டகர்மங்கள் ( எட்டு சித்திகள் ) செய்ய ஒரு சித்திக்கு 8 மூலிகை என அஷ்ட சித்திக்கு 64 மூலிகைகள் ஆகும். அஷ்டகர்மம் என்பது 1. ஆகர்ஷனம், 2. உச்சாடனம், 3. தம்பனம், 4. பேதனம், 5. மாரணம், 6. மோகனம், 7. வசியம், 8. வித்வேஷனம்

1.
ஆகர்ஷனம் : நமக்கு தேவையானதை இருக்கும் இடத்திலிருந்து நாம் இருக்கும் இடத்திற்கே வரவழைக்கும் வித்தையாகும். இதற்கு உதவும் மூலிகைகள் 1. வேளை, 2. உள்ளொட்டி, 3. புறவொட்டி, 4.சிறு முன்னை, 5. குப்பைமேனி, 6. அழுகண்ணி, 7. சிறியாநங்கை, 8. எருக்கு என எட்டு மூலிகைகளாகும். இதில்

மிருகங்களை அழைப்பதற்கு - வேளை, குப்பைமேனி.பெண்களை அழப்பதற்கு - உள்ளொட்டி, அழுகண்ணி.அரசர், பிரபுக்ளை அழைப்பதற்கு - சிறுமுன்னை.துர்தேவதைகளை அழைப்பதற்கு - புறவொட்டி.தேவதைகளை அழைப்பதற்கு - எருக்கு.அனைத்து அழைப்பிற்கும் - சிறியாநங்கை.


2.
உச்சாடனம் : பேய், பிசாசு, கெட்ட ஆவிகள், நோய்கள் தீமைகளை விரட்டியடித்தல். இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. பேய் மிரட்டி, 2. மான் செவிகள்ளி, 3. தேள்கொடுக்கி, 4. கொட்டைகரந்தை, 5. வெள்ளை கண்டங்கத்திரி, 6. மருதோன்றி, 7. பிரமதண்டு, 8. புல்லுருவி ஆகும். இதில்

மிருகங்களை விரட்ட - பேய்மிரட்டி.எதிரிகளை விரட்ட - மான்செவிகள்ளி.
உடலில் ஏறிய விஷங்களை விரட்ட - தேள்கொடுக்கி.நீர்வாழ் உயிரனங்களை விரட்ட - கொட்டைகரந்தை.கால்நடைகளை விரட்ட - வெள்ளை கண்டங்கத்தரி.பூத பைசாசங்களை விரட்ட - மருதோன்றி, புல்லுருவி பிறர் நமக்கு செய்யும் தீமகளை விரட்ட - பிரமதண்டு.



3.
பேதனம் : ஒன்றை மற்றொன்றாக மாற்றுதல், அதாவது ஒரு விஷயத்தை நினைத்து நம்மிடம் வருபவரை அந்த நினைப்பை வேறுபட்டு போகும்படி செய்தல். இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. வட்டதுத்தி, 2. செம்பசளை, 3. மாவிலங்கு, 4. பாதிரி, 5. கோழியாவரை, 6. சீந்தில்கொடி, 7. புடலங்கொடி, 8. ஆகாயதாமரை ஆகும்.

நெருப்பின் உக்கிரத்தை பேதிக்க - வட்டதுத்தி, மனிதனின் எண்ணத்தை பேதிக்க - செம்பசளை, பூத, பிசாசுகளை பேதிக்க - மாவிலங்கு, பாதிரி, துர்தேவதைகளை பேதிக்க - கோழியாவரை, எதிரிகளை பேதிக்க - சீந்தில்கொடி, பெண்களை பேதிக்க - புடலங்கொடி, வியாதிகளை பேதிக்க - ஆகாயதாமரை.

4.
மாரணம் : கொல்வது அல்லது மாற்றுவது. உலோகங்களை அதன் தன்மையில் இருந்து மாற்றுவது. எதிரிகளுக்கு நோயை உண்டாக்கி கொல்வது. இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. நச்சுப்புல், 2. நிர்விஷம், 3.சித்திரமூலம், 4. அம்மன் பச்சரிசி, 5. கார்த்திகை கிழங்கு, 6. மருதோன்றி, 7. கருஞ்சூரி, 8. நாவி ஆகும்.

மனிதர்களை மாரணம் செய்ய - நச்சுப்புல், நிர்விஷம், வியாதிகளை மாரணம் செய்ய - சித்திரமூலம், கருஞ்சூரை, கண்ணாடிகளை மாற்ற - அம்மன் பச்சரிசி, மிருகங்களை மாரணம் செய்ய - மருதோன்றி, கார்திகை கிழங்கு.


5.
மோகனம் : பிறரை நம்மிடம் மயங்கி இருக்க செய்வது. இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. பொன்னூமத்தை, 2. கஞ்சா வேர், 3. வெண்ணூமத்தை, 4. கோரைக்கிழங்கு, 5. மருளூமத்தை, 6. ஆலமர விழுது, 7. நன்னாரி, 8. கிராம்பு ஆகும்.

பெண்களை மோகிக்க - பொன்னூமத்தை, பொதுமக்களை மோகிக்க - கஞ்சா வேர், உலகத்தை மோகிக்க - வெண்ணூமத்தை, விலங்குகளை மோகிக்க - கோரைக்கிழங்கு, தேவதைகளை மோகிக்க - மருளூமத்தை, அரசர்களை மோகிக்க - ஆலம்விழுது, மனிதர்களை மோகிக்க - கிராம்பு, எல்லாவற்றையும் மோகிக்க - நன்னாரி.


6.
வசியம் : எல்லாவற்றையும் நம்மிடம் விருப்பமாகவும் இஷ்டமாயும் இருக்க வைத்தல். இதற்கு பயன்படு்ம் மூலிகைகள் 1. சீதேவிச் செங்கழுநீர், 2. நிலவூமத்தை, 3. வெள்ளை விஷ்ணுகிரந்தி, 4. கருஞ்செம்பை, 5. வெள்ளை குன்றி மணி, 6. பொன்ணாங்கன்னி, 7. செந்நாயுருவி, 8. வெள்ளெருக்கு ஆகும்.

இராஜ வசியத்திற்கு - சீதேவி செங்கழுநீர், பெண் வசியத்திற்கு - நிலவூமத்தை, லோக வசியத்திற்கு - வெள்ளெருக்கு, ஜன வசியத்திற்கு - கருஞ்செம்பை, விஷ்ணுகிராந்தி, விலங்கு வசியத்திற்கு - வெள்ளை குன்றி மணி, தேவ வசியத்திற்கு - பொனணாங்கன்னி,சாபம், வழக்குகள் வசியத்திற்கு - செந்நாயுருவி.


7.
வித்துவேஷனம் : பகையை உண்டாக்குதல். இதற்கு பயன்படும் மூலிகைகள். 1. கருங்காக்கனம், 2. வெள்ளை காக்கனம், 3. திருகு கள்ளி, 4. ஆடுதின்னாபாளை, 5. பூனைக்காலி, 6. கீழாநெல்லி, 7. ஏறண்டம், 8. சிற்றாமணக்கு ஆகும்.

அரசர்களுக்குள் பகை உண்டாக்க - கருங்காக்கணம், தேவர்களுக்கு - வெள்ளைக்காக்கணம், திருகுகள்ளி,பூத, பைசாசங்களுக்கு - ஆடுதின்னாபாளை, பெண்களுக்கு நோய் உண்டாக்க - பூனைக்காலி,
எதிரிகளால் உண்டாகும் ஆபத்தை தடுக்க - கீழாநெல்லி, உணவை உண்ணாமல் செய்ய - சிற்றாமணக்கு.


8.
தம்பனம் : தடுத்து நிறுத்துத்தல், விலங்குகளின் வாயை கட்டுதல். இதற்க்கு பயன்படும் மூலிகைகள் 1. கட்டுக்கொடி, 2. பால்புரண்டி, 3. பரட்டை, 4. நீர்முள்ளி, 5. நத்தைச்சூரி, 6. சத்தி சாரணை, 7. பூமிச்சர்கரை, 8. குதிரைவாலி ஆகும்.

விந்துவை கட்ட - கட்டுக்கொடி, பால்புரண்டி, நீர்முள்ளி, தண்ணீரைக்கட்டி அதன் மேல் அமர - கட்டுக்கொடி,பெண்களின் முலைபாலை கட்ட - பால்புரண்டி, வயிற்றுப் போக்கை நிறுத்த - பரட்டை, கற்களை கறைக்க - நத்தைச்சூரி, செயல்களை செயல்படாமல் கட்ட - சத்திசாரணை, திரவத்தை கட்டி திடமாக்க - பூமிச்சர்கரை கிழங்கு,கருப்பையில் உள்ள கருவை கட்ட - குதிரைவாலி.

மேற்படி மூலிகைகளை உரிய நாளில் காப்பு கட்டி, சாபநிவர்த்தி மந்திரம் சொல்லி பிடுங்கி வந்து உரிய மந்திர உருவேற்றி மேற்பட்ட அஷ்டகர்ம செயல்களை செய்ய அனைத்தும் ஜெயமாகும்.


புதன், 22 நவம்பர், 2017

மைத்ர முகூர்த்தம் 2017-2018


கடன் தீர்க்க உகந்த நாட்கள் மைத்ர முகூர்த்தம் 2017-2018


மிகவும் விசேஷமான இந்த முகூர்த்தம் – எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாக தீர்த்து வைக்கும் கால நேரமாகும்.

செவ்வாய்க்கிழமையும் அசுவனி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ரேய முகூர்த்தம் எனப்படும்.

செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்கினம் அமைந்துள்ள நேரமும் மைத்ரேய முகூர்த்தமாகின்றது.

மேற்படி காலங்களில் லக்கினமும் நட்சத்திரமும் அமைந்து செவ்வாய்க்கிழமை அமையாது போனாலும் 75 % பலன்களை பெறலாம்.

செவ்வாய்க்கிழமை அமைந்தால் நிச்சயமாக 100 % பலன்களை பெறுவது திண்ணம்.

மேற்குறித்த நாட்களில் நீங்கள் பெருந்தொகையாக தரவேண்டிய கடன் தொகையில் கொஞ்சம் இந்த குறிப்பிட்ட நேரத்தில் சம்பந்தப்பட்டவருக்கு


 திருப்பி தரவேண்டும், அவ்வளவுதான் அந்த பெரும் தொகையானது சிறுக சிறுக அடைபட்டுவிடும்.

இவ்வளவு சிறப்பு மிக்க நாட்களும் , நேரமும் இந்த ஆண்டில் (2017-2018) வருகிறது என்பதை கீழே இருக்கும் படத்தில் தெளிவாக 


கொடுக்கப்பட்டுள்ளது.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEQed59zspkvoM0t3qf0tnfaCAWzj_ef0aq71Mk_envUXP8Mfd_zYXJOWKKToLrtUuLM73DjAH21zIWGqnFLNEl5RFULMRtOJUmyeweR5TeRN1IQHBbdaBZZAd8JVqL-SwWUw_99yHRso/s1600/Kadan+Theera.jpg

வியாழன், 20 அக்டோபர், 2016

பணத்தடைகள் தகர்க்கும் சக்தி..!



அடிக்கடி பண முடை ஏற்பட்டுக்கொண்டே இருக்குமானால், வெள்ளிக்கிழமைகளில் காலை வேளையில் விநாயகர் மற்றும் லட்சுமி சேர்ந்து இருக்கும் படத்திற்கு சில எருக்கம்பூக்களை தூவி  


 தனி மண் அகலில் அல்லது வெள்ளி அகலில் நெய் தீபமேற்றி வழிபட்டு பின் மாலையில் அந்த பூக்களை எடுத்து பணப்பெட்டியில் வைக்கவும். மறு வாரம் மாற்றி விடலாம். மேற்கண்ட சக்தி வாய்ந்த வழிபாட்டு முறை எப்பேர்ப்பட்ட பண முடைகளையும் தகர்க்கும் சக்தியை கொண்டதாகும்.


(மாற்றும் பூக்களை கால் படாத இடத்தில் போடவும்) 

 

வெள்ளி, 14 அக்டோபர், 2016

ஓங்காரம்(பிரணவம்)

எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்த ஒலியே பிரணவம் எனப்படும். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது ‘ஓ’ என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில் வாயை மூடும்போது ‘ம்’ என்ற ஒலி தோன்றுகிறது.

இந்த ''ஓம் - ஓம்'' என்ற ஒலியையே பிரணவம் என்று கூறுவர்.

ஓம் என்னும் மூலமந்திரம், இறைவனை அம்மையப்பனாக வுணர்த்தும் ஒலிவடிவாகும். அது ஓ என்னும் ஒரே யெழுத்தே. இன்னிசைபற்றி மகர ஈறு சேர்க்கப்பட்டது. ஓங்காரம் எனினும் ஓகார மெனினும் பொருளளவில் ஒன்றே.
 
வடமொழியில் அகரவுகரம் புணர்ந்து (குல + உத்துங்கன் = குலோத்துங்கன் என்பதுபோல்) ஓகாரமாவது நோக்கியும், எழுத்துப் பேறான மகரத்தைச் சொல்லுறுப்பாகக் கொண்டும், ஓம் என்பதை அ + உ + ம் எனப் பிரித்து, அம் மூவெழுத்தும் முறையே முத்திரு மேனியரையுங் குறிக்குமென்றும், சிவனையும் சிவையையும் மாயையையுங் குறிக்குமென்றும், ஆதனையும் (ஜீவாத்துமாவையும்) பரவா தனையும் (பரமாத்துமாவையும்) மாயையையுங் குறிக்கு மென்றும், பலவாறு கூறுவர். 

ஓங்காரம் ஒரேயெழுத் தென்பதை, 

"ஓரெழுத் தாலே யுலகெங்குந் தானாகி" (திருமந்திரம் 765)
"ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர்" (திருமந்திரம் 941) 

என்பவற்றாலும், 

ஓங்காரம் அம்மையப்பனையுணர்த்தும் எழுத் தென்பதை 

ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம் ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே -திருமந்திரம் 2627- 

ஓங்காரத் துள்ளே யுதித்த ஐம்பூதங்கள் ஓங்காரத்த் துள்ளே யுதித்த சராசரம் ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றனை ஓங்கார சீவ பரசிவ ரூபமே -திருமந்திரம் 2628- 

என்பவற்றாலும் அறியலாம். உலகம் தோன்றுவதற்கு முன்பு பிரவண ஒலியே நிலவி இருந்தது என்றும், பிரணவத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன. 

ஓம் என்பது பிரணவ மந்திரமாகும. இது அ + உ + ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே ‘ஓம்’. மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது. மனித வடிவமும் அருள் வடிவம்தான். 

ஓம் என்ற பிரணவன் "அ" என்பது எட்டும் "உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம். 

உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல் உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு. 

அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது. மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். (உள் மூச்சு வெளி மூச்சு) 

" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு. " ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும் 

அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும். அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.
இதனை சிலர் இப்படியும் கூறுவார்கள்: 

அ என்பது முதல்வனான சிவனையும் உ என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்த சிவசக்தியினையும் குறிக்கும்.
 
இச்சிவசக்திவடிவமே, சொரூபமே வரி வடிவில் " ஓ " என பிள்ளையார் சுழியாகவும், "உ" எனவும் உள்ளது. வழிப்படும் உருவவாக 'சிவலிங்கமும்' ஒலி எழுத்தாக சொல்லும்போது ஓங்காரம் பிரணவம் என்றும் ஆன்றோர்களும், சான்றோர்களும் சொல்கிறார்கள்.

முதல் எழுத்து: 

"ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம் அருவுருவாய் நின்ற பாசிவமுமாகி தோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித் தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி " 

என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம். 

சட்டை முனியும் தனது சூத்திரத்தில் : " ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு " - என்றும் குறிப்பிட்டுள்ளார். 

சிவன், சக்தி, சிவசக்தி மூலத்தைக் குறிக்கும் ஓங்கார மந்திரத்திற்க்கும் முதல் எழுத்தாகவும் இதுவே " அ " உள்ளது. அத்துடன் எழுத்துக்களைக் குறிக்குங்கால், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் முதலிய மொழியிலும் இதுவே முதல் எழுத்து. 

" அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு " 
 
என்ற வள்ளுவர் முதல் குறள் மூலமும், 

அகத்தீசப் பெருமான் தனது மெய்ஞான சூத்திரத்தில், 

அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி, ஐம்பத்தோ ரெழுத்துக்கு தியாகி " அகாமுதல் அவ்வைமுத்தும் தியாகும் அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும் "
என்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு அறியலாம். 

உருவமும்- உடலும் 

உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தப்பிட்டபடி இதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய் விளங்குகிறது.
ஆண்டவன் அவ்வெழுத்தின் உருவமாய் உடம்பினுள் அமைந்துள்ளார் என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது பாடல் மூலம் விளங்கும். 

"கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம், பிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே"
- மச்சைமுனி தீட்சை ஞானம் 

உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகி
விந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை 

- அகஸ்தியர் முதுமொழி ஞானம். 

மேலும் இது வாயைத் திறந்தவுடன் நாக்கு, அல்லது மேல் வாயைத் தீண்டாமலேயே தொண்டையின் மூலமாய் பிறக்கும் ஓசை பேசும் போது உண்டாகும் எல்லா ஒலியையும் விட மிகவும் இயற்கையானது.
இது பற்றி யூகிமுனி தனது வைத்திய சிந்தாமணி 800 - ல் 

அவ்வென்னும் அட்சாத்தில் நாடிதோன்றும் அந்நாடி தானின்று தத்துவந் தோன்றும் எவ்வென்னு மெலும்பு தசை புடை நரம்பும் ஈலிட்டு பழுவோடிரண்டு கொங்கையுமாம் முவ்வென்று முட்டுக்கால் விளையீரெட்டாம் முட்டியமைத் தங்ஙனே யோருருமாக்கி " 

என்று கூறியுள்ளதன் மூலம் உருவம் உடம்பிற்கும் இதுவே முதல் காரணமென நன்கு தெளிந்துணரலாம். 

ஓங்காரம், பிரவணம். இது எல்லா எழுத்து ஒலிகட்கும் முதலாக விருந்து அகத்தும், புறத்தும், இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. இது உந்தியின் கீழ் தங்கி நிற்கும். 

இதை விளக்கும்படி திருமூலர், 

ஓங்காரம் உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும் நீங்கா வகாரமும் நீள் கண்டத் தாயிடும் " என்று கூறியுள்ளார். 

ஓங்காரத்தி தத்துவம், அ உ ம் எனமித்து ஒலி எழுப்புவது. அகாவொலி முதற்பிரிந்து படைத்தற் தொழிலையும், உகாரவொலி பின் தோன்றிக் காத்தல் தொழிலையும். மகாரவொலி முடிவாதலின் அழித்தற் தொழிலையும் ஆக முத்தொழிலையும் ஒருங்கே இணைத்து அடக்கி நிற்கும். 

"ஓம்" எனும் தாரக மந்திரத்தை தனிமையாக இருந்து ஏகாந்த தியானம் செய்தால் இதன் பலன் அதிகம். ஐம்புலன்களின் தொழில்கள் இயக்கம் அடைந்து மனது நிலைபெறும். ஐம்புலக் கதவு அடைபடும். தன்னையும், உலகையும் மறந்து நிற்க ஆசாபாசங்கள் மறந்து மனம் நிலைப்படும். 

குறுகிக் கிடந்த மனம் விசாலமடையும்.மெய்ஞான விசாரணை விளைந்து, அதனால் வாழ்க்கையும் வேதனைகளும் இல்லாத ஒன்றாகிவிடும். இந்த விரிந்த அண்டப்பார்வை உண்டாகும். 

"ஓம்" என தியானிப்பதால் அநேக சித்திகள் கைகூடும். அதனால் ஒழுக்கம் ஏற்பட்டு உண்மை அறிவு இன்னதென்று நன்கு நமக்கு விளங்கும். இதன் மூலம் ஒளியை தரிசித்து மனத்திருப்தி,மெய், முகம், ஆகியவற்றில் ஒரு தெளிந்த பிரகாசமிக்க ஒளி, அறிவு உயர்ந்து மற்றோருக்கு வழிகாட்டும் தன்மை நீங்களும் காணலாம். 

ஆனால் முயன்றால் நிச்சயம் சாதித்துவிடலாம். ஒரே சமயத்தில் மனதின் வெவ்வேறு ஓட்டங்களை, நாம் விரும்பிய பாதைகளில் செல்லுமாறு செய்வதுதான் அடிப்படையானது. அப்பட அருஞ் சாதனையைப் பழக்கப் படுத்திக்கொள்ளும்போது ஒரே நேரத்தில் மூன்று நான்கு காரியங்களிலாவது மனதை, கவனத்தைச் செலுத்தலாம். வேகமாக சிந்திக்கலாம். சிந்தனையின் பல படிகளைத் தாண்டி முடிபுகளை விரைவாக அடையலாம். போன்றவை எளிதானவைதானே! 

பலர் காயகல்பம் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள். இதை உண்டவர்கள் நரை, திரை மாறி பொன்போல் உடல் ஒளிர்ந்து - சாவில்லாது என்றும் இளமையுடன் வாழலாம் என்பர்கள். ஆயினும் அந்த காயகல்பம் கிடைப்பது அரிது. இருப்பினும் நாம் காயகல்பம் பெற ஒரு வழி உண்டு. 

அதிகாலை எழுந்ததும், இரவில் படுக்கபோகும் பொழுதும் நாள் தவறாது பத்து நிமிட மணித்துளிகள் ' ஓம் ' என்னும் மந்திரத்தை மனதால் உச்சரிக்க வேண்டும்.உச்சரிக்கும் போது நமது மூக்கின் வலப்பகுதி துவார வழியாக காற்றை சுவாசித்து இடப்பக்க மூக்குத் துவார வழியாக காற்றை வெளியிட வேண்டும். 

"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக் கூற்றை உதைக்கும் குறியது வாமே "

இருகாலும் என்பது இரு காற்று வழி. இடகலை, பிங்கலை. அவ்வாறு இரண்டாகப் பிரிக்காது இரு வழியாகவும் மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கிப் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு காற்றை முறையாக ஏற்றி இறக்கும் கணக்கை இவ்வுகத்தார் அறியவில்லை. அவ்வாறு அறிந்தவர்கள் பிறப்பு இறப்பு சுழற்சியை வெல்லும் ஆற்றல் அறிந்தவர்கள். 

வாழும் கலை என்று மனிதரை நீண்ட நாள் வாழ வைக்கும் கலையினை நம் பண்டைப் பெருமைக்குரிய சித்தர்கள் 'தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக' என்ற நோக்கில் தெளிவாக சொல்லியுள்ளார்கள். 

காயசித்தியின் பெருமையினை 'காகபுசண்டர்' பாடலைக் காண்போம் :

பாரப்பா பன்னிரண்டு முடிந்துதானால் பாலகன் போலொரு வயது தானுமாச்சு நேரப்பா இருபத்தி நான்கு சென்றால் நேர்மையுள்ள வயது மீரண்டாகும் சீரப்பா முப்பத்தி ஆறுமானால் சிறப்பாக மூன்று வயதாச்சுதப்போ தாரப்பா பன்னிரண்டுக்கோர் வயதாய்த் தான் பெருக்கி வயததுவை எண்ணிக்கொள்ளே .... 

ஒன்றில்லாமல் ஒன்றிலில்லை. இதனை மெய்பிக்கவே சிவனும் - சக்தியும். உலக மாந்தர்களும் அவ்வாறு எண்ணி ஒழுகல் வேண்டும். ஆணும் - பெண்ணும் சேர்ந்ததே வாழ்வு. வாழ்வில் இன்ப - துன்பம் எல்லாவற்றிலும் இருவருக்கும் சம பங்கு உண்டு என்பதை மெய்பிக்கவே, விளக்கவே அர்த்தநாரீஸ்வரர் உருவமாக சரிபாதி உடல். 

“ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற் றாங்கார மற்ற அனுபவங் கைகூடார் சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார் நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே.” 

ஓங்காரத்தில் உள்ளொளி வண்ணமாக இருப்பவன் சிவன். அவன் அருளின் தோற்றம் அங்கே உண்டாக ஆங்காரம் ஒழிந்து சிவனடியின் இன்ப நுகர்வு கைவரும். இந்நிலை கிட்டாதோர்க்கு இறப்பு உண்டென எண்ணமாட்டார். எனவே பிறவாமை கிட்டாது. தனால் பிறப்பு இறப்பினைத் தரும் புறச்சமய நெறியில் உழல்வர். 

படத்தை உற்றுப் பாருங்கள். விநாயகரின் தலை “ஓம்” உடன் பொருந்தியிருக்கிறது அல்லவா? “ஓ”வின் இரு சுழிகள் இரு கண்கள். ஞானத்தின் ஆதிமூலம் விநாயகர் என்பது இதற்காகத்தான். விநாயகரின் தலையும் மனிதனின் தலையும் ஒன்றுதான். ஞானத்தின் இருப்பிடம் தலையில்தான். ஆக, பிரணவம் எனும் “ஓம்” மனிதனின் தலைக்குள்தான் உள்ளது.

அஷ்டகர்மம் செயல்படும் விதம்

ஒவ்வொரு திசைக்கும் மூலைக்கும் ஒருவித சக்தி உண்டு. இது விஞ்ஞானமும் மெய்ஞானியரும் ஒத்துக்கொண்ட விஷயம். திசைகளுக்கு ஒரு குணம் உண்டு. அதேபோல் மூலிகைகளில் பலநூறு இந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மை படைத்தது . அதேபோல் மந்திர ஒலிகளிலும் ஒவ்வொரு ஒலியும் ஒவ்வொரு தன்மையை வெளிப்படுத்தும் குணம் கொண்டது. 
 
மரங்களை எடுத்துக்கொண்டாலும், தானியங்களை எடுத்துக் கொண்டாலும், இரவு பகல் என்ற நேரத்தை எடுத்துக் கொண்டாலும்,  வண்ணங்களை எடுத்துக் கொண்டாலும், ஒவ்வொரு கிழமை, திதி, தெய்வம் இவைகளை எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொன்றிலும் பல வித்தியாசமான சத்திகளும் தன்மைகளும் இருக்கும்.

இதை கண்டுணர்ந்த நம் மெய்ஞானியர் இவைகளை எட்டு வகையான தந்திர செயலுக்கு (அஷ்டகர்மம்) வகை பிரித்தனர். ஒவ்வொரு செயலுக்கும் பொருந்தக்கூடிய குணஅம்சம் கொண்டவைகளையும் ஒத்துழைப்பு தருவதையும் பிரித்து பயன்படுத்தினர். கூடுதலாக மன ஆற்றல் சக்தியும் பெற்று அதை செலவிட்டு பயன்கொண்டனர். இந்த வகையில் தான் அஷ்டகர்மம் செயல்படுத்த கையாளப்பட்டது. இதை சற்று விரிவாக காண்போம். 
 
திசைகள் மற்றும் மூலைகள் அறிக
 
பூமி ஆகாயம் எனும் பிரபஞ்சத்தில் என்திசை இருப்பதை யாவரும் அறிந்ததே. பூமியில் படுத்து ஆகாயத்தை தன் முகம் நோக்கி படுத்துறங்குபவருக்கு ஒருவகையான குணம் இருக்கும். உறங்கும் போதும், உறங்கி விழிக்கும் போதும் அதிகமாக அந்தந்த திசையின் குணம் தான் ஒவ்வொருவருக்கும் இருக்கும். 
 
மூலை திக்குகள் இரண்டும் கெட்டான் என்பார்கள். அதாவது இரு பக்க சந்திப்பு கொண்டவையே மூலை திக்குகள் அல்லவா? அதற்கு கூடுதலாக சில சேர்ப்பு சக்திகள் கலந்திருக்கும். ஒரு மருந்தை இன்னொரு தன்மை கொண்ட மருந்தை கலந்தால் ஒருவித புது மருந்து உண்டாகுமல்லவா? அதைப்போல மூல திக்குகளுக்கு இரட்டிப்பு தன்மை சேர்ந்து புது சக்தி இருக்கும். ஆக ஒவ்வொரு திக்கிற்கும் ஒவ்வொரு தன்மையுள்ளதை சுருக்கமாக புரிந்துகொள்ளுங்கள் போதும். 
 
அடுத்தபடியாக மூலிகைகளை பார்ப்போம்.
 
 சில மூலிகைகள் யார் சாப்பிட்டாலும் எந்த வயதினர் பயன்படுத்தினாலும் நன்மை மட்டுமே செய்யும். பல மூலிகைகள் விஷத்தை ஏற்படுத்துவதாகவும், விஷத்தை முறிப்பதாகவும், வலிமை மற்றும் வீரியத்தை தருவதாகவும் இருக்கும் . இந்த மூலிகைகளில் நீர், நெருப்பு போன்ற பஞ்சபூத சக்திகளின் ஆளுகை இருக்கும். அதாவது உஷ்ணம், குளுமை, வாயு, மயக்கம் தருவதாகவும் இருக்கும், இவைகளை எதுவுமே வெளிக்காட்டாமல் நல்லபடியாக பயன்பட்டு ஜீரனமாகக்கூடியதும் இருக்கும். (இதில் உஷ்ணம் என்பது நெருப்பையும், குளுமை என்பது நீரையும், வாயு என்பது காற்றையும், மயக்கம் என்பது ஆகாயத்தையும், ஜீரனம் என்பது பூமி என்றும் அறிக. இதுதான் பஞ்ச பூத ஆளுகை) இந்த மூலிகையின் காற்று பட்டால்கூட (முகர்தல்) சில மாற்றங்களை ஏற்படுத்திவிடும். ஒரு மூலிகை சக்தியோடு இன்னொரு மூலிகையை இணைக்கும் போது ஒரு புது சக்தி உண்டாகும். இது நல்லதும் உண்டு, தீயதும் உண்டு. மூலிகைகள் மருத்துவத்திற்கு மட்டுமல்ல குணத்தை மாற்றக் கூடிய சக்தியும் உண்டு. ஆக மூலிகைகளுக்கு பேதகம் இருந்திருப்பதை அறிந்திருப்பீர். இதையும் சுருக்கமாக புரிந்துகொள்ளவே கொடுத்துள்ளேன். 
 
அடுத்தது மந்திர ஒளிகள் பற்றி சுருங்க அறிக : 
 
ஒவ்வொரு ஓசை எழுப்பக்கூடியதும் ஒலியை உண்டாக்குகின்றன. இதற்கு மொழி ஒரு தடையில்லை. உள்ளுக்குள்ளேயே கூறினாலும் வெளிப்படையாக கூறினாலும் ஒரு சொல்லின் அர்த்தம் ஒன்றுதான் என்றாலும் தன்மைகள் வேறாகும். ஓம் என்ற ஒரு மந்திரத்தை வெளியாட்களுக்கும் கேட்கும்படி சொல்லிப்பாருங்கள் சத்தமாக தொண்டை பகுதியே அதிகம் அழுத்தம் கொண்டு ஓசை வெளிப்படும். இதையே மனதிற்குள்ளேயே மிக சத்தமாக சொல்லிப்பாருங்கள். அடிவயிறு பகுதி அதிகம் அழுத்தம் கொண்டு ஓசை வெளிப்படும். இரண்டின் ஓசையின் அர்த்தம் ஒன்றுதான் என்றாலும் ஓசையின் தாக்கம் உடனே மாறுபடுத்தும் என்பதே உண்மை. சாதாரணமாக ஒருவரோடு பேசும்போது தொண்டையில் இருந்துதான் பேசுவோம். ஒருவரை ஆசிர்வாதிக்கும் போது நம்மிடம் ஆசி பெறுபவர்மீது பாசம் இருந்தால் மார்பு மற்றும் தொண்டையில் சிறு அழுத்தத்தோடு ஆசியை வெளிப்படுத்துவோம். இதுவே ஒருவரை சபிக்க முற்படும் போது ஒருவித ஆவேச உணர்வோடு இருப்போம். அப்போது வெளிப்படுத்தும் ஓசையாகப்பட்டது அடிவயிற்றில் இருந்து புறப்பட்டு ஓசை வெளியே வரும். சாபம் உடனே அரங்கேற காரணம் இதுதான்.

வாசி பயிற்சியில்லா மனிதனுக்கும் சபிக்கும் போது எல்லா சக்கரமும் தொட்டபடிதான் வார்த்தை வெளிப்படும். அதனால் வார்த்தைகள் பலித்துவிடுகின்றன. ஆசிர்வாதம் தாமதமாகத்தான் வேலை செய்யும். காரணம் சாப வெளிப்பாடுபோல் ஆசி வெளிப்பாடு இல்லாததே காரணமாகும். உணர்வு ஒருபுறம் இருந்தாலும் ஓசை புறப்படும் இடமும் அதன் வேகமும் உந்துதலும் மிக முக்கியமாகின்றது. இங்குதான் நம் ஞானிகளின் அராய்ச்சியே தொடங்கியது .

ஒரு வார்த்தை பலிக்க வேண்டுமென்றால் அடிவயிறு எனும் மூலாதார சக்கரத்தில் இருந்து தொடங்கும் வார்த்தைகள் மிக முக்கியம் என்பதை அறிந்தனர். ஓம் என்ற ஒலியில் அந்த புறப்பாடு இருப்பதை அறிந்து அதை முன்வைத்தனர். அடுத்து ஒரு வார்த்தையில் அர்த்தம் என்பதை விட அழுத்தம் மிக முக்கியம் என்பதை அறிந்தனர்.

அடுத்து மூலாதாரம் தொடங்கிய ஓசையாகப்பட்டது. ஒரே சீராக வரும்போது ஒரு தாக்கத்தையும், இதுவே தொடங்கிய இடத்திலிருந்து வாய்வழியாக வருவதற்குள் ஓசையின் அழுத்தம் பலதரப்பட்டு ஏற்ற இறக்கத்துடனோ அல்லது ஒரு சக்கராவில் சற்று கூடுதல் அழுத்தமும் இன்னொரு சக்கராவில் குறைவான அழுத்தமும் கொடுத்து வெளிப்படும்போது ஒருவித மாறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்தனர். இந்த ஓசைகளோடு நம் எண்ண பதிவை ஆழமாக செயல்படுத்தும்போது அது நம் எண்ணச் செயலை முடித்து தருகிறது என்பதை அறிந்தனர்.

அந்த வகையில் இதை சீடர்களுக்கு  புரியவைப்பதும் உணர்த்துவதும் மிக சிரமமாக இருந்ததால் இதை வார்த்தைகளாக கூறும்போதே இச்செயல் நடந்தால்தான் என்னாலும் இக்கலை வளரும் என்று அறிந்த ஞானியர் ஒரு உபாயத்தை கண்டுபிடித்தனர். அதுதான் மந்திரமாகும். (மந்திர ஜெபம் சித்தியாக உரு 48 நாள் ஏற்றுபவர்கள் மந்திரத்தின் ஓசை ஏற்றம் இறக்கம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இந்த தவநாளில் வேறு வார்த்தை வாயில் இருந்து வரக்கூடாததின் காரணம் மேலேகூறிய தகவலில் புரிந்துகொள்ளலாம்.) இந்த மந்திர வார்த்தைகளை மாற்றி செபிப்பதின் மூலம் அஷ்டகர்ம செயலுக்கு பொருந்தக்கூடிய வார்த்தையாக கண்டு மந்திரமாக வெளிப்படுத்தினர்.

ஒரு வார்த்தையின் எழுத்தை இடம் மாற்றி மாற்றி எழுதி படித்து பார்த்தால் வெவ்வேறு வகையான சத்த வெளிப்பாடும் உடலின் உள்ளே அழுத்த மாறுபாடுகளும் உண்டாகும் என்பதை அறிந்து ஞானியர் வெளிப்படுத்தினர். அந்த வார்த்தைதான் மகாமந்திரம், பஞ்சாட்சர மந்திரம் என்று சொல்லப்படும் நமசிவய என்பதை அறிக.

இந்த ஐந்தெழுத்து வெளிப்படுத்தாத தாக்கத்தை வேறொரு வார்த்தை புதிதாக ஏற்படுத்திவிடாது . அதனால்தான் மந்திரங்களுக்கெல்லாம் சிறந்ததாக இந்த பஞ்ச அட்சரத்தை கூறினார்கள். இந்த வார்த்தை தான் மாற்றி மாற்றி அஷ்டகர்ம செயலுக்கு உபயோகிக்கப்படுகிறது என்பதை சுருக்கமாகஅறிக. 
 
அடுத்து மரங்களை பார்ப்போம்.
 
(விருட்சம்) மரத்தின் உறுதியை நாம் இங்கு பார்க்கப்போவதில்லை. அதன் தன்மையைத்தான் இங்கு காண வேண்டும். 
 
புளியமரத்தின் அடியில் தொடர்ந்து இளைப்பாறி வருவோமேயானால் உடலில் சூடு ஏற்படும். இதனால் உடல் இளைக்கும். கோபம் உண்டாகும். காமத்தை கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கும் அல்லது விந்து இலகிப்போகும். 
 
அடுத்து வேப்பமரம் புளியமரத்திற்கு நேர்மாறானதாகும். உடல் உஷ்ணத்தை நீக்கக்கூடியதும், புத்தி தெளிவை தரக்கூடியதும் ஆகும். பித்தத்தையும் தெளியவைக்கும். அடுத்து வில்வமரம் இதன் அடியில் தினசரி இளைப்பாறுபவனுக்கு உயர்ந்த வசியங்கள், அதிஷ்டங்கள், மன இன்பங்கள் யாவும் ஏற்படும். உடலில் சூட்டையும், குளுமையையும் சமஅளவில் வைத்திருக்க உதவும். வில்வமர காற்றிற்கு மனதை வசீகரிக்கும் ஆற்றல் இயல்பாகவே உள்ளதை அறியலாம்.

அடுத்து எட்டிமரம் இதன் அடியில் தொடர்ந்து இளைப்பாறுபவன் யாராக இருந்தாலும் வெகுவிரைவில் மூளை பாதிப்பு உண்டாகும். அல்லது மற்றவரை துஷ்பிரயோகம் செய்ய வேண்டும் என்ற எண்ணமே உண்டாகும்.

அரளி செடியின் காற்று தொடர்ந்து பட்டாலோ அல்லது அதன் அடியில் இளைப்பாறினாலோ தொடர்ந்து மனிதர்களிடம் நேர்மையாக நடந்துகொள்ள முடியாது . இது அலரி செடிக்கும் பொருந்தும் .

அடுத்து அத்தி மற்றும் இலுப்பை மரங்களின் அடியில் இளைப்பாறினால் இதை தொடர்ந்து செய்தால் நம் செயல் மட்டுமல்ல மனதில் நினைக்கும் வேறொருவரின் செயலும் அங்கேயே நின்றுவிடும். மேலும் மனம் மிக அமைதியாகும் அல்லது மனம் வெருமனே ஆகும். இந்த இரு மரங்களின் அடியில் தொடர்ந்து இளைப்பாறும்போது நம் உடலில் வேறொரு சக்தி உட்புக அதிக வாய்ப்புண்டு. அதனால்தான் மோகினி, சில யட்சனி பயிற்சிகள் இந்த மர அடியில் அமர்ந்து செய்யச் சொன்னார்கள்.

இதேபோல் மா, பலா, நெல்லி, ஆல், அரசு என ஒவ்வொரு மரத்திற்கும் ஒருவித சக்தி உண்டு. இதன் அடியில் தொடர்ந்து இளைப்பாறும்போது வெவ்வேறு வகையான மாற்றங்கள் உண்டாவது உண்மை. அதற்குத்தான் சில மரங்களின் தன்மையை மட்டும் உதாரணத்திற்கு கொடுத்திருந்தேன்.

அது மட்டுமல்லாமல் நம் மனதில் என்ன எண்ணவோட்டம் ஓடுகிறதோ அதை நடத்திக் கொடுக்கும் சக்தி இந்த மரங்களுக்கும், மரத்தின் பலகையை பயன்படுத்தினாலும், இவைகளை எரித்து புகையை முகர்ந்தாலும் இந்த பலன் கிடைப்பதை நம் ஞானியர் அறிந்தனர்.
 
இதில் முக்கியமாய் அறிவது யாதெனில் எண்ணத்தின் போக்கை ஆவேசம், சாந்தம், மிதமானதுஎன்று மூன்று வகையாக பிரிக்கலாம். இந்த எண்ண வேகத்தின் அடிப்படையிலும் பலன்கள் மாறுபட்டு குறிப்பிட்ட செயலை செய்ய வைக்கிறது . ஆனால் குறிப்பிட்ட செயலுக்குரிய மந்திரங்களை  கூறும்போது மனம் தன்னால் தேவையான பிரிவுக்கு மாறுகிறது . இதையும் நினைவில் வைத்துதான் மந்திர ஒலியை உருவாக்கினார்கள்.

மந்திரத்தை எந்த செயலுக்கு என தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதுபோல கூடவே அந்த செயலுக்கு ஒத்துப்போகும் மர பலகையும் (ஆசனம்) ஓமத்திற்கு அதே வகை குச்சியும் பயன்படுத்தினால் கூடுதல் நன்மையான, விரைவான பலனும் கிடைப்பதை அறிந்தனர்.

ஆடைகளில் கூட ஒவ்வொரு வண்ணத்திற்கு ஒரு தன்மை உண்டு. ஒரு வண்ணத்தைப் பார்த்தால் சாந்தம் கிடைக்கும். இன்னொரு வண்ணத்தைப் பார்த்தால் வேகம் உண்டாகும். இன்னொரு வண்ணத்தை அணிந்தாலோ பார்த்தாலோ மனம் சுறுசுறுப்படையும். சாந்தம் கிடைக்கும். சில வண்ணங்கள் உடலை அடக்கி மனதை வக்ரமாக்கும்.   இதையும் அறிந்த ஞானியர் செயலுக்கு தகுந்தவாறு வகைப்படுத்தினர்.

வடிவங்கள் தெய்வ ரூபங்கள் கூட ஒவ்வொன்றைப் பார்க்கும்போது ஒவ்வொரு மாற்றமான மன வெளிப்பாட்டை உண்டாக்கும். இவைகளையெல்லாம் செயலுக்கு தகுந்தவாறு வகை பிரித்து உண்டானதுதான் அஷ்டகர்ம வசியங்கள்.

இவைகளையெல்லாம் ரகம் பிரித்து நம் ஞானியர் நமக்கு கொடுத்து சென்றாலும் இவைகளை செயல்படுத்த நம் மனமே முக்கியமாக தகுதியுடன் அமையவேண்டும். ஏனெனில் மன ஆற்றல் இருந்தால்தான் அஷ்டவகை செயல்களை பிறருக்கு ஏவி விட முடியும். சுயமாக நமக்கே பயன்படுத்தú வண்டுமானாலும் வேறு பாதிப்பு வராமல் இருக்க மனப்பயிற்சி மிக முக்கியமாகும்.
 
நீங்கள் இந்த எட்டு வகை செயலையும் கற்று பிறருக்கு உதவிக்காக பயன்படுத்தப்போகிறீர்கள் என்றால் மிகமிக கவனமாக செயல்படவேண்டும். ஏனெனில் சில மர ஆசனங்களில் அமரும்போது நம் புத்தியைக் கூட கெடுத்துவிடும்.

எனவே ஆரம்பத்தில் தெய்வ அருள் பெறவேண்டிய மந்திரங்களை நன்கு பயின்று அதன்மூலம் இறைவனிடம் வரம்  வாங்கிய பிறகு இதை தொழிலாக செய்ய  முற்படுங்கள். 
 
தெய்வ வரம் பெறாமல் எந்த செயலையும் உங்களுக்கோ பிறருக்கோ செய்யாதீர்கள். இல்லையெனில் இந்த அஷ்ட கலை  தொட்டவனைக் கெடுத்துவிடும் கவனம். இந்த அஷ்டகர்ம மந்திரம் மற்றும் வடிவம் மற்றும் எந்த செயலுக்கு அட்சரத்தை திருப்பிப்போடவேண்டும் என்பதை தகட்டில் யந்திரமாக்கினார்கள். இந்த அஷ்ட கர்ம யந்திரத்தை பொருத்தமட்டில் ஒரு வரைபடம் அல்லது சூத்திரம் என்றே கருதவேண்டும்.

இந்த அஷ்டகர்ம பொதுவான தகவலை சொல்லிவிட்டேன். இந்த யந்திரத்தை மட்டும் சொல்ல இயலாது . இன்றைக்கு அஷ்டகர்மத்திற்கும் யந்திரம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பல புத்தகத்திலும் வரைந்து கொடுத்துள்ளார்கள். எல்லாமே தவறு மாற்றி, மாற்றி குழப்பி வைத்து சித்தர்கள் கொடுத்ததை இவர்கள் மேலும் குழப்பிவிட்டார்கள். இது மாபெரும் தவறு. அஷ்டகர்ம அவயங்களை முறையாக கையாளாவிட்டால் சிறு தவறும் நம்மை பாதித்துவிடும்.

காரணம் இந்த அஷ்டகர்ம செயல் விதி எனும் நவக்கிரகத்திற்கும், தேவர்களுக்கும் எதிரானது. கொஞ்சம் பிசகினாலும் எல்லாம் இழந்து பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளிவிடும். பரதேசியாக்கிவிடும்.
 
  கலைகளை அறியும் அவசர குணம் உள்ளவர்கள் விளையாட்டாக இதை செய்து பார்த்து வினையை தேடிக்கொள்ளக்கூடாது என்பதற்காக இதில் அஷ்டகர்மத்தைப் பற்றிய செயல்முறைகள் கொடுக்க விரும்பவில்லை . பொதுவாக நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக கொடுத்திருக்கிறேன்.   இதை குறையாக நிறுத்தியதற்காக தயவுசெய்து மன்னிக்கவும்.

பஞ்ச பட்சி வித்தையோடு அஷ்டகர்ம வித்தையை இணைத்தால் எல்லாம் வெல்லலாம். ஆனால் சிவகட்டளைக்கு கட்டுப்பட்டு சில நேரங்களில் சில சந்தர்ப்பங்களில் விதியை மீறக்கூடாது . விதியை மீற வேண்டிய இக்கட்டில் இக்கலையை  பயன்படுத்தலாம்.

ஒரு எச்சரிக்கை எக்காரணம் கொண்டும் உங்களுக்காக அஷ்ட கர்மத்தை பயன்படுத்திக்கொள்ளக்கூடாது. பிறருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஜாதகமும் அப்படித்தான். அருள்வாக்கும் அப்படித்தான். உங்களுக்காக நீங்களே பார்த்துக்கொள்ளக்கூடாது. வாக்குசித்தியை இழந்துவிடுவீர். உங்கள் குடும்பத்தாருக்கு கூறலாம் தவறில்லை.

நாம் பயன்படுத்தும் நட்சத்திரத்திற்குரிய பெயர் எழுத்துகள் முழுக்க முழுக்க பஞ்சபட்சியும் ஜோதிடமும் இணைந்தது . இதை பிரித்து ரகசியம் அறியாமல் அப்படியே பயன்படுத்துகிறோம். அதனால்தான் பலர் இன்னலான வாழ்வை வாழ்கிறார்கள்.

ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவனுக்கு பல எழுத்தில் பெயர் வைக்க பொதுவாக கொடுக்கப்பட்டுள்ளது . இதில் தவறில்லை என்றாலும் எடுத்து கையாளும் விதம் தவறாக உள்ளது. ஒருவனுடைய லக்கணம் மற்றும் தொழில் எதிர்கால நடவடிக்கையை கவனித்து பார்த்துதான் இந்த ஒலியில் பெயர் அமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். மற்றபடி மேலோட்டமாக கொடுக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் பொதுவான அடையாள குறியீடேயாகும். அதில் முழு அதிஷ்டம் என்பது மேலே சொன்னவாறு பார்த்து அமைப்பதில் தான் உள்ளது.
 
இதை இங்கு சம்மந்தம் இல்லாமல் கூறுவதாக எண்ண வேண்டாம். அஷ்டகர்ம கலை, பஞ்சபட்சி கலை, ஜோதிட கலை இவை மூன்றும் நெருங்கிய சம்மந்தம் கொண்டது. .

அஷ்டகலை சிவனுக்குரியது, பஞ்சபட்சி கலை விஷ்ணுக்குரியது, ஜோதிடக்கலை பிரம்மாவிற்குரியதுமூன்றும் இணைந்தால்தான் சக்தி எனும் வெற்றிக்கலையை பெறமுடியும்.