வியாழன், 4 ஏப்ரல், 2013

ஓரு வார ஈஷா யோகப்பயிற்சி

முன் தகவல்

ஓரு வார ஈஷா யோகப்பயிற்சி முடிந்தவுடன் இதனை 1 மண்டலம் (40 நாட்கள்) நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பயிற்சி செய்ய வேண்டும், பின்னர் 6 மாதங்கள் குறைந்தபட்சம் தினசரி ஒரு தடவையாவது செய்யவேண்டும். 
 
என்னோடு, மற்றும் எனக்கு முன்பாக இப்பயிற்சி செய்தவர்கள் நிறைய பேர் தொடர்பு கிடைத்தது, அப்போதெல்லாம் சில பேர் இதனை தொடர்ந்து செய்ய முடியாத காரணத்தால் அதனை மறந்துபோனதாகவும், ஞாபகப்படுத்தும்படியும் கேட்டுக்கொண்டனர். அவர்களுக்காகவே இது தொகுக்கப்பட்டுள்ளது.
 
எக்காரணம் கொண்டும் இத்தொகுப்பை மட்டுமே வைத்துக்கொண்டு பயிற்சியை தொடங்கவேண்டாம். கண்டிப்பாக நீங்கள் உடல் நலத்தை பாதுகாக்க எண்ணினால் நீங்கள் உங்கள் ஊரிலேயே இப்பயிற்சியினை மேற்கொள்ளலாம். http://ishafoundation.org ல் நிகழ்ச்சி தேதிகளை தெரிந்துகொள்ளுங்கள். ரூ.900 மட்டுமே நன்கொடையாக அளித்து நீங்கள் இந்த “சாம்பவி மகா முத்ரா” வை கற்றுக்கொள்ளலாம்.
 
இப்பயிற்சி முழுக்க கண்களை மூடியிருக்வேண்டும், படங்களில் உள்ளதுபோல் திறந்திருக்க வேண்டாம்!(அது போன்ற படங்கள் கிடைக்கவில்லை).
 
 
யோகப் பயிற்சிக்கு முன் / உணவுக்கு முன்

ஓம்… ஓம்…ஓம்…
ஸஹனா வவது ஸஹனௌ புனக்து
ஸஹவீர்யம் கரவாவஹை
தேஜஸ்வினாவதீதமஸ்து
மாவித் விஷா வஹை ஹி
ஓம் சாந்தி… சாந்தி…சாந்திஹி


கூடியிருப்போம். கூடியிருந்துண்போம்
கூடியிருந்து ஆற்றலைப் பெருக்குவோம்.
நமது ஆற்றல் அளவற்றதாகட்டும்.
நம்மிடையே தீய உணர்வு இல்லாது போகட்டும்.
ஓம் சாந்தி… சாந்தி…சாந்தி

 யோகப் பயிற்சிக்கு பின் 

ஓம்… ஓம்… ஓம்… 

அஸத்தோமா ஸத்கமய 
தமஸோமா ஜ்யோதிர்கமய 
ம்ருத்யோர்மா அம்ருதங்கமய 
ஓம் சாந்தி… சாந்தி…சாந்திஹி 


எம்மைப் பொய்மையிலிருந்து மெய்மைக்கும் இருளிலிருந்து ஒளிக்கும் (அறியாமையிலிருந்து மெய்மைக்கும் தெளிவிற்கும்) நிலையாமையிலிருந்து நிலைப்பேற்றிற்கும் இட்டுச் செல்வாயாக. 
 

சாம்பவி மகா முத்ரா

1.பதங்காசனா

சாம்பவி மகா முத்ரா பயிற்சியின் முறைகள் 1.பதங்காசனா – பட்டாம்பூச்சி மாதிரி காலை மடக்கி வைத்துக்கொண்டு மேலே கீழே 2 நிமிடங்கள் செய்ய வேண்டும்.


2. சிசுபாலாசனா

வலது காலை இடது கை நடுவில் வைத்துக்கொண்டு குழந்தையை தாலாட்டுவது போல் செய்யவேண்டும்(2 நிமிடம்)அதேபோன்று இடது காலை வலது கை நடுவில் தாங்கிக்கொண்டு, குழந்தையை தாலாட்டுவது போல் செய்யவேண்டும், இதுவும் 2 நிமிடம்.

3. நாடி விபாசனா

இதனை மூன்றுமுறை செய்துமுடிக்கவேண்டும். பூனை போன்று முதுகை நன்றாக வானவில்லை போல செய்யவேண்டும், பின்னர் முதுகுதண்டை கீழாக இறக்கவேண்டும் , மூச்சை தலை உள்வாங்கும்போது வெளியேற்றவேண்டும், தலையை மேல்நோக்கும்போது மூச்சை உள் வாங்கவேண்டும். குனிந்துகொண்டே வலது காலை நெற்றிதொட செய்து வெளிநீட்டவேண்டும், இதையே இடதுகாலிலும் தொடரவும்.

4. சுகக்கிரியா

அர்த்தாசனத்தில் உட்கார்ந்து 7 நிமிடங்கள்  இதனை செய்யவேண்டும்.

5. ஓம்

21 முறை “அ” “உ” “ம்” அதாவது ஓம் என்று கூறவேண்டும்.

6. விபரீத சுவாசம்

தலையை சற்றே உயர தூக்கி மூச்சை வேகமாக வெளியே உள்ளே இழுக்க வேண்டும், மூன்று நிமிடங்கள்.

7. பூட்டு (ஓஜஸ்)

மூச்சை நன்றாக உள்ளிழுத்து தலையை பின்னோக்கி சாய்த்து கழுத்தை உள்ளிழுத்து பின்னர் தலைகவிழ்த்து பூட்ட வேண்டும், வயிற்று பகுதியை இறுக்கவேண்டும், மலவாயை சுருக்கவேண்டும், இப்படியே ஆனந்தமாக எவ்வளவு நேரமிருக்கமுடியுமோ இருக்கவேண்டும்.பின்னர் கழுத்தை நேர்வைத்து மூச்சை வெளியிடவேண்டும், கழுத்தை பின்னோக்கி சாய்த்து, உள்ளிழுத்து மறுபடியும் பூட்ட வேண்டும், இந்த நிலையில் எவ்வளவு நேரம் சுகமாக இருக்கமுடியுமோ இருக்கலாம். பின்னர் கழுத்தை நேராக்கி மூச்சை உள்ளிழுத்து , வயிற்றையும், மலவாயையும் தளர்வாக விடவும்.

8. ஆனந்தமாக மூச்சை கவனிக்கவும்

மேல் கூறியவற்றை முடித்தபின் மூச்சை நன்றாக கவனிக்கவும் , ஓரே சீராக இருக்கும்!, இரண்டு , மூன்று நிமிடங்கள் இந்நிலையில் இருந்தவுடன் கைகலால் வணங்கி முகத்தை துடைத்துக்கொண்டு , மெதுவாக கண்களை திறக்கவும்(முதலில் தரையை பார்த்து பின்னர் பார்வையை மேல்நோக்கி கண்களை திறக்கவேண்டும்). குருவுக்கு நன்றி சொல்லி உங்கள் பணியை முடிக்கவும்.
 
 

5 கருத்துகள்:

  1. தயவு செய்து சாம்பவி பயிற்சி பற்றி இப்படி குறிப்புக்கள் கொடுக்கவேண்டாம் ….ஆர்வமுள்ளவர்களை ஈஷா யோகா வகுப்பிற்கு அழைத்து வரவும் …முறைப்படி கற்க வேண்டும் ……

    பதிலளிநீக்கு
  2. Its advisable to join isha class and learn this kriya.. dont do BY SELf...

    பதிலளிநீக்கு