புதன், 3 ஏப்ரல், 2013

தேவர்கள், அசுரர்கள் எல்லாம் எங்கே???

தேவர்கள், அசுரர்கள்னு புராணங்களில் படித்துள்ளோமே, இன்று அவர்கள் எல்லாம் எங்கே???

ஒரு சிறிய விளக்கம்:

சத்ய யுகம்/கிருத யுகம்:
அசுரர்கள் பாதாள உலகிலும் தேவர்கள் மேலுலகிலும் மனிதர்கள் பூலோகத்திலும் வாழ்ந்தனர்.

திரேதா யுகம்:
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி வாழ்ந்த யுகம். அசுரர்களும், தேவர்களும் பூமியின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்து வந்தனர்.
ராமர் அயோத்தியிலும் ராவணன் இலங்கையிலும் வாழ்ந்தனர்.

துவாபர யுகம்:
பகவான் கிருஷ்ணன் வாழ்ந்த யுகம்.
அசுரர்களும் தேவர்களும் ஒரே குடும்பத்தில் வாழ்ந்தனர்.
கிருஷ்ணர்-கம்சன்/சிசுபாலன்.

கலி யுகம்:
அசுரர்களும் தேவர்களும் ஒரே மனிதனுக்குள் வாழத் தொடங்கிவிட்டனர்.
சில நேரம் நாமே தேவராகி அடுத்தவர் கஷ்டப்படும் போது உதவுவோம். நம்மை வருத்தப்படுத்தி அடுத்தவருக்காக உதவும் அந்த சில நேரங்களில் நாம் தேவராகிறோம். ஒரு சில நேரங்களில் நாமே நமது சுய நலத்திற்காக பிறரை கஷ்டப்படுத்தி அசுரராகிறோம். சில நேரங்களில் உதவ முடியாமல் மனதளவில் வருத்தப்பட்டு மனிதனாகி நிற்கிறோம்…!

அசுர குணம்,தேவ குணம் என்பது நம் அனைவருக்குள்ளும் மறைந்து தான் இருக்கிறது. தேவ குணம் எனும் சாத்விக குணம் மட்டும் இருந்தால் மனிதன் கோழையாகி விடுவான்.அதனால் அசுர குணம் வருவது நல்லதே.ரவுத்ரம் கொள் ஆனால் ரவுத்ரத்துக்கும் ஒரு எல்லை உண்டு.

அது  எல்லை தாண்டாமல் இருந்தால் அசுர குணம் வரவேற்கப்படக்கூடியதே. ரவுத்திரம் இரு பக்கமும் கூர்மையைக் கொண்டுள்ள கத்தி. அது இருவரையும் பதம் பார்த்துவிடும். ஒரு குழந்தை பசியில் இருக்கும் போது பார்த்து வருத்தப்படுவது மனித குணம். பசியப் போக்குவது தெய்வ குணம்.

வயசானவரோ, கர்ப்பிணிப் பெண்களோ பேருந்தில் நின்று கொண்டு வரும் போது அவர்களைப் பார்த்து வருத்தப்படுவது மனித குணம்.
நாம் எழுந்து அவர்களுக்கு இருக்கையை விட்டுக் கொடுப்பது தெய்வ குணம்….

இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்...

அசுரர்களும் தேவர்களும் ஒரே மனிதனுக்குள் வாழத் தொடங்கிவிட்டனர்.
சில நேரம் நாமே தேவராகி அடுத்தவர் கஷ்டப்படும் போது உதவுவோம். நம்மை வருத்தப்படுத்தி அடுத்தவருக்காக உதவும் அந்த சில நேரங்களில் நாம் தேவராகிறோம்.

ஒரு சில நேரங்களில் நாமே நமது சுய நலத்திற்காக பிறரை கஷ்டப்படுத்தி அசுரராகிறோம்.

சில நேரங்களில் உதவ முடியாமல் மனதளவில் வருத்தப்பட்டு மனிதனாகி நிற்கிறோம்… ஏன் இந்தக் காலத்தில் அவதாரங்கள் நிகழ்வதில்லை என்பதற்கு வாரியார் சுவாமிகளைப் போன்ற ஆன்றோர்கள் சொன்னது இது தான். "அந்தக் காலத்தில் ஒரு இராவணன், ஒரு கம்சன், ஒரு சகுனி, ஒரு துரியோதனன், ஒரு சிசுபாலன், ஒரு ஜராசந்தன் என்று இருந்தார்கள். இந்தக் காலத்தில் ஒவ்வொரு மனிதனும் தருமனும் துரியோதனனுமாக இருப்பதால் மனதளவிலேயே அவதாரங்கள் நிகழ்கின்றன இது தான் அத்வைததின் அடிப்படை தத்துவம்". 

கடவுள் தூரத்தில் இருந்து மேற்பார்வைப் பார்த்தது எல்லாம் அந்த யுகங்கள்.

நம் உள் கிடப்பவர் தான் கட வுள். அவரை காண, நலம் வாழ 
எந்நாளும் உன்னை தோண்டி போய் கெட்ட குணங்களை அகற்று....!

நன்றி :மஹா அவதார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக