வெள்ளி, 14 அக்டோபர், 2016

ராசி மந்திரம் யந்திரம் மூலிகை

ராசிக்கு உரிய மந்திரங்கள் யந்திரங்கள் மூலிகைகள்

 
ஒவ்வொரு மனிதனும் நல்லநேரம் வரும்பொழுது நன்மையும், கெட்டநேரம் செயல்படும் பொழுது கெட்டவையே நடக்கும். எனினும் இராசி மூலிகையும், சக்கரமும் . மந்திரமும் பயன்படுத்தினால் கெட்டநேரத்தையும் நன்மையாக வசியப்படுத்த முடியும். அனுபவத்தில் இம்முறைகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஒவ்வொன்றிற்கும் மந்திரம் உண்டு யந்திரத்தை 9  க்கு 9 இன்ச் அளவு செம்பு தகட்டில் எழுதி அதற்கான மந்திரத்தை 1008 முறை உரு ஏற்றி பிறகு நினைத்த காரியம் நடக்க வேண்டி பிறகு பயன்படுத்துங்கள். மிக அற்புத பலனை கொடுக்கும் மிக எளிய முறை இதுவாகும். யந்திரத்துடன் மூலிகையும் சிறிது பயன்படுத்தவும். அதை பிரேம் உள்ளே வைத்து யந்திரத்தை மேலே வைத்து சட்டம் அடித்து பொட்டு வைத்து வணங்கச் சொல்லவும். பிரேம் செய்யும்பொழுது பின்பக்கம் பழைய ஒரு ரூபாய் அளவிற்கு ஒரு ஓட்டை போட்டு அட்டையோ தகடோ பொருத்தச் சொல்லவும்.
 
மேஷ ராசி:
மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும் !
 
     ஓம் ஸம் சரஹனபவாய ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ
                   எந்திரம் : பால ஷண்முக ஷடாஷர யந்திரம்
                  மூலிகை : வைகுண்ட மூலிகை.
 
 ரிஷப ராசி:
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து கீழ்க் கண்ட சுலோகத்தைத் தினசரி 11முறை கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.
                       ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யை
                    ஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ
                   எந்திரம் : மஹாலட்சுமி யந்திரம்.
                   மூலிகை : அம்மான் மூலிகை.
மிதுன ராசி:
மிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 54முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
                       ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ
                    எந்திரம் : ஸ்ரீ தன ஆகர்ஷனயந்திரம்
                   மூலிகை : அற்ற இலை ஒட்டி.
கடக ராசி:
கடக ராசியில் பிறந்தவர்கள் பவுர்ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து விரதம் இருந்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 21முறை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
 
 
                       ஓம் ஐம் க்லீம் ஸோமாய நமஹ
                    எந்திரம் : ஸ்ரீ துர்கா யந்திரம்
                   மூலிகை : நத்தைசூரி மூலிகை.
சிம்ம ராசி:
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
                       ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நமஹ
                      எந்திரம் : ஸ்ரீ சிதம்பர சக்கரம்
                     மூலிகை : ஸ்ரீ விஷ்ணு மூலி.
கன்னி ராசி:
கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.
                       ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நமஹ
                   எந்திரம் : ஸ்ரீ சுதர்ஸன யந்திரம்
                  மூலிகை : துளசி.
துலா ராசி:
துலா ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி நாள் அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
                        ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நமஹ
                    எந்திரம் : ஸ்ரீ சூலினியந்திரம்
                   மூலிகை : செந்நாயுருவி.
விருச்சிக ராசி:
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
                      ஓம் ஹ்ரீம் தும் துர்காயை நமஹ
                  எந்திரம் : பாலசண்முக ஷாடத்ச்சர யந்திரம்
                 மூலிகை : மஞ்சை கிளுகிளிப்பை.
தனுசு ராசி:
தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.
                     ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நமஹ
                     எந்திரம் : தன சக்ர யந்திரம்
                    மூலிகை : சிவனார் மூலி.
மகர ராசி:
மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் சித்தி அடையும்.
                   ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நமஹ
                     எந்திரம் : ஸ்ரீ பைரவ யந்திரம்
                    மூலிகை : யானை வணங்கி.
கும்ப ராசி:
கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.
                ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோ நமஹ
                     எந்திரம் : ஸ்ரீ கணபதி யந்திரம்
                    மூலிகை : தகரை மூலிகை.
மீன ராசி:
மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்.
                  ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நமஹ
                     எந்திரம் : ஸ்ரீ குபேர தன ஆகர்ஷண யந்திரம
                   மூலிகை : குப்பைமேனி.

தீட்சை தரும் குரு என்பவர்...


தீட்சை தரும் குரு என்பவர் சில தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். 


நிலையற்ற இந்த உலகத்திலிருந்து விடுபடுவதாகிய மோட்சத்தையே இந்து சாஸ்திரங்கள் வாழ்க்கையின் அறுதி லட்சியம் என்கின்றன. துன்பங்களிலிருந்து முற்றிலுமாக விடுபட வேண்டும், எப்போதும் ஆனந்தத்தில் திளைத்திருக்க வேண்டும் என்றே மனிதன் விரும்புகிறான். இதனை ஆன்மீக வாழ்க்கை மட்டுமே அளிக்க முடியும். ஆன்மீக வாழ்க்கை என்பது கடவுளை மட்டுமே சார்ந்து வாழும் வாழ்க்கை. இதன் பொருள், கடவுளை அறிந்த மகானால் மட்டுமே இத்தகைய வாழ்க்கை வாழ முடியும் என்பது தான். இறை உணர்வை அளித்து மோட்சத்தை தரும் ஆன்மீக வாழ்க்கையை யோகம் என்று அழைக்கிறோம். சாண்டில்யர் மற்றும் நாரதரால் விளக்கப்பட்ட மான பக்தி யோகம் என்ற யோகமே கலியுகத்திற்கு சிறந்தது என்று ஸ்ரீராம கிருஷ்ணர் கூறுகிறார். எந்த தெய்வத்தையும் தியானிப்பதன் மூலமும் நாம் இறைக்காட்சியை பெற்று முடிவில் மோட்சத்தை பெற முடியும் என்று பக்தி யோகம் கூறுகிறது. எந்த தெய்வத்தை தியானிக்க விரும்புகிறோமே அதனை இஷ்ட தெய்வம் என்கிறோம். இது ஒருவரின் குலதெய்வமாகவும் இருக்கலாம். அல்லது வேறெந்த தெய்வமாகவும் இருக்கலாம். இதே போல் ஜபம் மற்றும் தியானம் செய்வதற்கு ஒரு தகுதியான குருவிடமிருந்து தீட்சை பெறுவது அவசியம்.

மந்திர ஜபத்தின் முக்கியத்துவம்

 ஜபம் செய்ய செய்ய மந்திரம் மேலும் மேலும் நல்ல பலனை அளிக்கும். ஜபம் மூன்று வகையானது. சத்தமாக ஜபம் செய்வது 'வாசிக ஜபம்'அல்லது உச்ச ஜபம். மெல்லிய குரலில் செய்வது உபாம்சு ஜபம். மனத்திற்குள்ளேயே செய்வது மானச ஜபம். இதில் மானச ஜபம் மிகுந்த பலனை தருவதாகும். ஜபம் செய்யும் போது எண்ணிக்கையை விரல்களினாலோ அல்லது ஜபமாலையினாலே செய்யலாம். 10,12,28,32 அல்லது 108 முறை ஜபம் செய்யலாம். இதில் 108 என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மனிதன் ஒரு நாளில் 21,600 முறை மூச்சு விடுகிறான். தூக்கத்திற்காகவும், உடலைப் பேணுவதற்கான காரியங்களுக்காகவும் அதில் பாதியைக் கழித்தால் உணர்வுடன் வேலை செய்யும் போது10800 முறை மூச்சு விடுகிறான். 108 என்பது இதையே உணர்த்துகிறது. ஒவ்வொரு மூச்சுக்கும் ஒரு தடவை மந்திரம் உச்சரிக்கப்பட வேண்டும் என்ற லட்சியத்தை நினைவுபடுத்தவே இந்த 108 எண்ணிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

தியானத்தின் பலன்

 மனக்கட்டுப்பாட்டையும், மன ஒருமைப்பாட்டையும், மன அமைதியையும் பெற தியானமும், ஜபமும் பெற உதவுகின்றன. பொதுவாக இவை இரண்டும் சேர்ந்தே செல்கின்றன. இருந்தாலும் தியானம் ஆழ்ந்து செல்லும் போது ஜபம் தானாகவே நின்று விடும். மன ஒருமைப்பாடு இல்லாமல் இருந்தால் ஜபம் அதிக எண்ணிக்கையில் செய்யப்படும் போது அது அமைதியையும், மன ஒருமைப்பாட்டையும் பெற உதவும் என்று அன்னை ஸ்ரீசாரதா தேவி கூறியுள்ளார்.

 ஜபமாலை 

ஜபமாலை என்பது ஜபம் செய்யும் போது எண்ணிக்கையை கணக்கிட உதவுகிறது. கைவிரல்களால் ஜபத்தை பண்ண முடிந்தாலும், ஜப மாலையினால் செய்வது எளிது. ஜபமாலையில் மணிகள் பொதுவாக பத்து விதமான பொருட்களால் செய்யப்படுகின்றன. அவைகளில் ருத்திராட்சம், உலர்ந்த துளசித்துண்டு, தாமரை விதை, சந்தனம், ஸ்படிகம் ஆகியவை அதிகம் பயன்படுத்தப்படுபவை. இந்த மணிகள் பட்டு நூலினாலே, செம்பு, வெள்ளிக்கம்பியாலே கோர்க்கப்பட்டு ஜபமாலையாக செய்யப்படுகிறது. மணிகளின் எண்ணிக்கை 32 லிருந்து 108 வரை வேறுபட்டாலும், பொதுவாக 108 எண்ணிக்கையே உபயோகத்தில் உள்ளது. சிறிது பெரிய மணி ஒன்று இவைகளுக்கு நடுவில் இருக்கும். இது 'மேரு'என்று அழைக்கப்படுகிறது. ஜப எண்ணிக்கையின் போது விரல்கள் இதை தாண்டக்கூடாது.

குருவும் சீடனும்
 
தீட்சை தரும் குரு என்பவர் சில தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும். அவர் சாஸ்திரங்களின் சாரத்தை அறிந்திருக்க வேண்டும். இறையனுபவத்தை பெற்றிருக்க வேண்டும். களங்கமற்ற, தூய்மையான வாழ்க்கையுடன், சீடனிடம் அளவற்ற கருணையை கொண்டிருக்க வேண்டும். பணிவு, முக்தியில் தீராத ஆர்வம், புலனடக்கம், சாஸ்திரங்கள் மற்றும் குருவிடம் நம்பிக்கை, கீழ்ப்படிதல் ஆகியவை சீடனுக்கு உரிய குணங்களாக இருக்க வேண்டும்.

 மந்திர தீட்சை

 தியானிப்பின் போது உச்சரிக்க மந்திரம் என்ற ஒன்று வேண்டும். மந்திரம் என்பது அதனை ஜெபம் செய்பவரை பாதுகாக்க வல்ல இறைவனின் திருநாமம். தீட்சை என்பது குரு சீடனுக்கு இந்த மந்திரத்தை அளிக்கும் முறை. இதன் மூலம் சீடனின் பாவங்கள் குறைக்கப்பட்டு அழிக்கப்பட்டு விடுகின்றன. மந்திர தீட்சை  சீடனின் உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்துகிறது. அவனை தியானம் செய்வதற்கு தகுதி உடையவனாக்குகிறது. தியானத்தின் முழு ஆழத்தையும் காண இறங்குபவர்கள் ஒரு குருவிடமிருந்து தீட்சை பெறும் இந்த புனிதச் சடங்கை மேற்கொள்ள வேண்டும்.

மந்திரத்தின் பகுதி.

பொதுவாக மந்திரம் என்பது நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும். அவை பிரணவம் என்ற ஓம், இஷ்ட தெய்வத்தை குறிக்கும் பீஜம், இஷ்ட தெய்வத்தின் பெயர், வந்தனத்தை தெரிவிக்கும் 'நம' ஆகியவற்றின் ஒருங்கிணைந்த சொல் தான் மந்திரம்.

 தியானம் செய்யும் முறை.

 1. உங்கள் இஷ்ட தெய்வத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அது உங்கள் குலதெய்வமாகவோ, உங்களுக்கு பிடித்த வேறு தெய்வமாகவோ இருக்கலாம்.
 
2. தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு நேரங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக காலை 5 மணி, மாலை 7 மணி. முடிந்தவரை இதே நேரத்தில் தினமும் தியானத்தில் அமர வேண்டும்.
 
3. வீட்டின் ஒரு இடத்தை தியானத்திற்காக தேர்ந்தெடுங்கள். அது பூஜை அறையாகவே, வேறு அமைதியான இடமாகவோ இருக்கலாம். பூஜை அறை இல்லையென்றால், இஷ்ட தெய்வத்தை வைப்பதற்கு ஒரு சிறு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.
 
4. அங்கு ஆசனத்தை விரித்து அதில் அமரவும். தலை, கழுத்து, மற்றும் முதுகெழும்பு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடிக் கொள்ளவும்.
 
5. சூரியன், நிலவு, நட்சத்திரங்கள், மேகங்கள் எதுவும் இல்லாத பரந்த எல்லையற்ற ஆகாயம் மங்கிய ஒளியில் இருப்பதாக சில நிமிடங்கள் கற்பனை செய்யவும். இது உங்கள் உடலையும், உள்ளத்தையும் தளர்த்தி அமைதிப்படுத்தும்.
 
6. இப்போது உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லவும். பன்னிரண்டு இதழ்கள் கொண்ட சிவப்புத் தாமரையை அங்கு கற்பனை செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் அங்கு அமர்ந்திருப்பதாக எண்ணவும்.
 
7. இப்போது இஷ்ட தெய்வத்திடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்யவும். நல்ல உடல், அமைதியான மனம், நம்பிக்கை, பக்தி, விவேகம், பற்றின்மை ஆகியவற்றுக்காக பிரார்த்திக்கவும்.
 
8. ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் இஷ்ட தெய்வத்தை தியானிக்கவும். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து இஷ்ட தெய்வத்திடம் நிறுத்தவும்.
 
9. பின்பு இஷ்ட தெய்வத்தின் நாமத்தை ஜபம் செய்யவும். உங்கள் இஷ்ட தெய்வம் ராமராக இருந்தால் 'ராம,ராம' என்று தொடர்ந்து ஜபம் செய்யவும். குறைந்த பட்சம் 108 முறையாவது ஜபம் செய்ய வேண்டும். அதிகமாக செய்ய விரும்பினால் அது 108 ன் மடங்காக இருக்கட்டும்.
 
10. இப்போது மானசீக பூஜை செய்யலாம். சந்தனம், பூ, ஊதுபத்தி, தீபம், நைவேத்தியம் ஆகிய ஐந்து பூஜை பொருட்களால் செய்யப்படுகின்ற பூஜையாக அது இருக்கட்டும்.
 
11. முடிவாக தியானத்தின் பலன்களை இஷ்ட தெய்வத்தின் திருவடிகளில் சமர்ப்பிக்கவும்.

வியாழன், 13 அக்டோபர், 2016

பதினைந்தாம் புலி - ஓர் ஆய்வு




பதினைந்தாம் புலி என்பது ஆடு புலி ஆட்டம் என்ற விளையாட்டே ஆகும்.


 
இந்த விளையாட்டை கண்டுபிடுத்தவர்கள் சோழரா,பாண்டியரா,கொங்குநாட்டை 

சேர்ந்தவரா என தெரியவில்லை.

ஆனால் நாம் இதில் உள்ள நுட்பம் பற்றி மட்டும் ஆராய்வோம்.



இதில் 3 புலிகள் 15 ஆடுகள் உள்ளது. மேலும் முக்கோணத்தின் மீது மூன்று பட்டை

கோடுகள்.மொத்தம் 23 புள்ளிகள்.

ஆடுபுலி ஆட்டம் ஒரு போர்கலையை மையபடுத்தி மறைமுகமாக விளையாடும் 

அறிவுபூர்வமான விளையாட்டு.

மூன்று புலிகள் ஆணவம்,கன்மம்,மாயை மேலும் 15 ஆடுகள் என்பது பத்து 

தசேந்திரியங்கள்,5 பூதங்களால் ஆன உடலை குறிக்கும்.

இதில் காலியான ஐந்து புள்ளிகள் ஐந்து அவஸ்தைகளை குறிக்கும்.

மூன்று கோடுகள் ஆழ்மனம்,நடுமனம்,புறமனம் ஆகிய நிலைகளை குறிக்கும்.

இதில் புலிகளின் குகை எனபடுவது *ஆழ்மனம்* என்கிற மேல் அடுக்கை குறிக்கும்.

அங்கிருந்து தான் புலிகள் வந்து ஆடுகளை கவரும்ஐந்து ஆடுகள்(உடலை இழந்தால்)

வெட்டுபட்டால் மூன்று 

புலிகள்(ஆணவம்,கன்மம்,மாயை) வெற்றியடைந்தது.



இந்த புலிகளை வெல்ல நமக்கு கொடுத்தது தான் இந்த முக்கோணம்(அறிவு).

விளையாடுபவர் முக்கோணம் பார்த்து விளையாடுவதால் அறிவு விருத்தியாகும்.

 மூளையின் செல்கள் அவரை அறியாமலே விழிப்புடன் இருக்கும்

இதை தான் இன்றை காலம் உபயோகபடுத்துகிறது.

180° பார்வையில் உங்கள் கண்ணில் முக்கோணம் பட்டால் உங்கள் மூளை உடனே 

விழிப்பு அடையும் நீங்களும் நிதானம் ஆவீர்கள். உதாரணம்:



போக்குவரத்து அறிவிப்புகள் அனைத்தும் முக்கோணத்திலேயே வைப்பார்கள்.வேகத்தடை,வலதுபக்கம்,இடதுபக்கம் குறியீடுகள்.

கோவிலுக்குள் செல்லும் முன் கலச தரிசனம் செய், என்பது கலசம் பார்ப்பது முக்கோணம் அமைப்பில் இருபதால் மனம் ஒரு நிலைபடும். அதன் பின் உள்ளே செல்வது

முக்கோணத்தின் கூர்மையான பகுதியை உற்று பார்ப்பதால் கவனம்(concentration)ஓர் நிலை படும் இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது.





முருகனை வணங்கிணால் அறிவு வளரும் என்பது அவன் கையில் உள்ள வேல் முக்கோண அமைப்பு என்பதால் தான். நீங்கள் உங்கள் வீட்டில் முக்கோண படம் உங்கள் கண்ணில் படும்படி வைத்தால் மூளை எப்போதும் விழிப்புடன் இருக்கும் என்பது சூட்சமம் 






பூஜை அறையில் பிரமிடு இருந்தால் மூளை மனம் ஒருமுகமாக இருக்கும் என்பது அது முக்கோணம் ஆகும் ஆக இந்த விளையாட்டை விளையாடினால் புலிகளை எப்படி அடைப்பது என்பதும் அறிவு வளர்ச்சி அதிகபடுத்தவும் என்பதும் புரியும். ஆன்மீக கருத்து ரீதியாக எந்த ஒரு ஆட்டையும் இழக்காமல் மும்மலங்களை வெல்வது எப்படி என்பது இந்த விளையாட்டில் நுட்பமாக உள்ளது.


 

மந்திரித்த கயிறுகளின் மகிமைகள்


பல கோவில்களில், தர்காக்களில், மாந்திரீகர்களிடத்தில் பலர் மந்திரிக்கப்பட்ட முடிக்கயிறுகளை வாங்கி அணிந்திருப்பதை காணலாம். தேர்ந்த மந்திர உபாசனை உள்ளவர்கள் கொடுத்தால் மட்டுமே இது வேலை செய்யும்.  சிலர் இதனால் பயன் இல்லை என்று அறியாமையில் சொல்வதுண்டு. இதற்கு அறிவியல் ரீதியாகவும் விளக்கம் கொடுக்க  முடியும்.

 நமது கைகளில் உள்ள நாடியில் தான் உடலில் உள்ள வாதம்,பித்தம், கபம் போன்றவற்றை அறிய முடியும்.மேலும் நாடியில் கிரகங்கள் சூரியன்,சந்திரன் மற்றும் குரு அமைந்துள்ளன. ஆகவே சிகப்பு,வெள்ளை, மஞ்சள் போன்ற முடிக்கயிறுகள் நம் நாடியில் பட்டு வர பல்வேறு பலன்கள் உண்டாகும். சிகப்பு அனுமனுக்கும் உகந்தது,மேலும் உடல் கோளாறுகள், மன கோளாறுகள் நீக்குவதிலும் இது சிறந்த பங்கு வகிக்கிறது. குறிப்பிட்ட வண்ணத்தை குறிப்பிட்ட தேவைக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து தேவையான பீஜ மந்திரங்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் உச்சரித்தவாரே முடி போடுதல் தான் முடிக்கயிறு. 

இதன் மூலம் பல காரியங்களை செய்ய முடியும். கருப்பு நிற கயிறு திருஷ்டி, குழந்தைகளின் தோஷங்கள், கிரக தோஷங்கள் மற்றும் செய்வினை போன்றவற்றிற்கும், சிவப்பு நிற கயிறு பல வித சித்து,வசியம் மற்றும் அதிர்ஷ்டத்திற்கும் உபயோகப்படுத்தலாம். 

தெய்வீக சக்திகளை பெற, சுபமுண்டாக ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கயிரும்,வெள்ளை உடலில் சக்திகள் விரயமாகாமல் தடுப்பதற்கும் பயன் படுத்த வேண்டும். சித்தர்கள், மாமுனிகள் பல முன்னோர்கள் புஜத்தில், கழுத்தில் மற்றும் கணுக்காலில் முடிக்கயிறுகள் உபயோகித்து வந்ததை நாம் யாவரும் அறிந்திருப்போம். 36,108,1008 என பல்வேறு எண்ணிக்கையில் முடிக்கயிறு இடலாம். இவற்றின் சக்தி குறிப்பிட்ட  கால அளவே இருக்கும்.பின்பு மாற்றி விட வேண்டும்.

சூரிய உதயத்திற்கு முன் விடிகாலையில் சுத்தத்துடன் கட்டுபவரும், கட்டப்படுபவரும் வடக்கு முகமாக நின்று கட்ட சக்தி மிகும்.கிரகங்களுக்காக கட்டி கொள்வதென்றால் ஞாயிறு சிகப்பும், திங்கள் கிழமை வெள்ளையும்,வியாழக்கிழமை மஞ்சளும் நாமே கட்டி கொள்ளலாம்.பலன் தரும். இது போன்று விபூதி, குங்குமம் போன்றவற்றில் சக்திகள் ஏற்றி கொடுப்பதும் முறையில் உள்ளன.

அகோர மந்திர பலன்கள்



துங் நமசிவாய என்று உச்சரிக்க - வித்துவான் ஆகலாம்.
ஓங் கங்சிவய என்று உச்சரிக்க - சக்தி அருள் உண்டாம்.
ஓம் சிங்சிவாய என்று நம என்று உச்சரிக்க - நினைப்பது நடக்கும்.
ஓம் பங்சிவாய நம என்று உச்சரிக்க - தடைகள் நீக்கும்.
ஓம் யங்சிவாய நம என்று உச்சரிக்க - துன்பங்கள்  விலகும்.
ஓம் மாங்நமசிவாய என்று உச்சரிக்க - செல்வம் செழித்தோங்கும்.
ஓம் மங்சிவாயநம என்று உச்சரிக்க - கவலைகள் வற்றும்
கெங்ஓம் நமசிவாய என்று உச்சரிக்க - வசிய சக்தி மிகும்
ஓம் மங்யங் சிவாய என்று உச்சரிக்க - விஷங்கள் இறங்கும்.
அங் ரங்ஓம்சிவாய என்று உச்சரிக்க - சாதனை படைக்கலாம்.
ஓங் அங் சிங் சிவாயநம என்று உச்சரிக்க  - சப்த கன்னியர் தரிசனம்.
ஓங் வங்சிங் சிவாயநம என்று உச்சரிக்க - முக்குணத்தையும் வெல்லலாம்.
ஹிரீம் நமசிவாய என்று உச்சரிக்க - அரிய பேறுகள் கிடைக்கும்.
ஐயுஞ் சிவாயநம என்று உச்சரிக்க - ஆறு சாஸ்திரம் அறியலாம்.
வங்சிங் ஓம்சிவாயா என்று உச்சரிக்க - தேவர்கள் தரிசனம் காணலாம்.
சங் சிவய நம என்று உச்சரிக்க - விஷ பாதிப்பு நீக்கும்.
ஓம் துங்சிவாய நம என்று உச்சரிக்க - முத்தொழிலும்  சிறக்கும். 

ஸ்ரீலம்ஹரீம் ஓம் நமசிவாய என்று உச்சரிக்க- பெரிய பூமிகள் கொடுக்கும்.
சிங் நமசிவய என்று உச்சரிக்க - பயிர்களால் நன்மை.
வங் சிவய நம என்று உச்சரிக்க - மழை நனைக்காது.
சிவாய ஓம்ஸ்ரீ என்று உச்சரிக்க - மழை நிற்கும்.
கலியுங் சிவாய என்று உச்சரிக்க - வெள்ளம் பெருக்கெடுக்கும்.
ஓம் கங்சிவ்வுங்சிவய என்று உச்சரிக்க - பெரியகாரியங்களில் வெற்றி. 

சங்யவ் சி மந என்று உச்சரிக்க - தண்ணீரில் நடக்கலாம்.
மங் நங் சிங் சிவய என்று உச்சரிக்க - பிசாசு, பேய் சரணம் செய்யும்.
"சங் கங் சிவாயநமா" என உச்சரிக்க ஜீவனில் சிவத்தைக் காணலாம்.
"மங் மங் மங்" என உச்சரித்தால் உணவை வெறுத்து பசியை துறக்கலாம்.
"வசாலல சால்ல சிவாய நமா" என உச்சரித்தால் மழையில் நனையாமல் செல்லலாம்.
"சரனையச் சிவாய நம" என உச்சரிக்க வானில் பறக்கலாமாம்.
"கேங் கேங் ஓம் நமசிவாயம்" என உச்சரிக்க எல்லோரும் வசியமாவர்.
"ஓங் சருவ நம சிவாய" என உச்சரிக்க மழை உண்டாகும்
வாமதேவ மந்திரம்
"கங்கங்ணங் நிஷர் சிவிங்கம்" என உச்சரித்தால் காமதேவன் அருள் கிட்டுமாம்.
"வங் வங் சிங் சிவாய நம"என உச்சரிக்க உலகின் எப்பாகத்திற்கும் வழி தெரியுமாம்.
"சதா சிவாய நம" என உச்சரிக்க நான்கு வேதத்தின் பொருள் அறியலாம்.
"ஓம் அங்கிஷ ஊங் சிவாயநம" என உச்சரிக்க நினைத்த இடத்தில் மனதினை விரைவாக செய்யலாம்.
சத்யோசாத மந்திரங்கள்
"சிவாய ஓம்" என உச்சரிக்க திருமாலில் ஆற்றல் கிட்டும்.
"ஓங் உங் சிவாய ஓம்" என உச்சரிக்க குண்டலினியின் சக்தியை காணலாம்.
"கிருட்டிணன் ஓம் சிவாய நம" என உச்சரிக்க இராவணன் மலையைப் பெயர்த்த பலம் கிட்டும்
ஈசான மந்திரங்கள்
"சிமிறியும் ஊங்சிவாய ஊங் அங் நம ஓ" என உச்சரிக்க சிவதத்துவத்தை காணலாம்.
"மங் நங் சிவ சிவாய ஓம்" என உச்சரிக்க நந்தியின் தத்துவத்தை உணரலாம்.
"வங் யங் சிங் ஓம் சிவாய" என உச்சரிக்க எதிரியின் உடல் தனலாகும்.
"சிங் சிங் சிவாய ஓ" என உச்சரிக்க முக்காலத்தையும் உணரலாம்.
"மய நசிவ சுவாக" உச்சரிக்க ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்களின் ஆசி கிட்டும்.