திங்கள், 5 செப்டம்பர், 2016

உடற்கட்டு மந்திர பிரயோகம்



 மாந்திரீக தொழிலில் உடற்கட்டு என்பது மிக முக்கியமாக கருதப்படுகிறது .இந்த உடற்கட்டு மந்திரத்தை சித்தி செய்து கொண்டு மயானத்தில் அல்லது வெளி இடங்களில் பூஜை செய்யும் பொது மற்ற தேவதைகள் நாம் செய்யும் பூஜையை தடை செய்யும் பொருட்டு நம்மை தாக்க வரும் அதிலிருந்து நம்மை பாதுகாக்க வேண்டுமானால் .முதலில் உடற்கட்டு மந்திரத்தை முறையாக சித்தி செய்து கொண்டு அதன் பிறகு எந்த ஒரு பூஜையையும் துவங்க வேண்டும் .




 


உடற்கட்டு மந்திரம் :

ஓம் உமா மகேஸ்வரன் முன்னிற்க
பாதமிரண்டும் பூமி தேவி காக்க ,
கனுக்காலிரண்டும் கணபதி காக்க ,
துடையுமுந்தியும் துர்க்கை காக்க ,
வயிறு மார்பும் வைரவன் காக்க ,
கழுத்தும் புஜமும் கதிர்வேல் காக்க ,
கண்ணும் புருவமும் காளி காக்க ,
முகமும் கபாலமும் மும்மூர்த்தி காக்க,
ஓம் அம் உம் சம் வம் சிவ சிவா 
கட்டு கட்டு என் தேகம் முழுவதும் 
சங்கு சக்கரம் காக்க பகைவரைக்கட்டு ,
பிசாசுகளை கட்டு எதிரிகளை கட்டு ஏவலை கட்டு ,
இந்திரன் முதல் ஈசானயங்கட்டு
நான் தொட்ட மந்திரம் நீ தொட்ட மந்திரம் ,
நான் தொட்ட மூலி ,நீ தொட்ட மூலி 
எட்டு திசையும் பதினாறு கோணமும் என் முகமாக 
ஓம் சிவய நம சிவய நம சிவய நம .

இந்த மந்திரத்தை ஓடுகின்ற தண்ணீரில் நின்று கொண்டு 1008 ஜெபித்து விட்டு மறுநாளில் இருந்து பிள்ளையார் பிடித்து வைத்து அருகு சூட்டி அதற்கான அவள் பொறி கடலை படைத்து ஒரு நாளுக்கு 108 வீதம் 11 நாட்கள் ஜெபித்தால் மந்திரம் சித்தியாகும் .இதனால் சர்வ மந்திர சித்தியும் சர்வ மூலிகை சித்தியும் ஆகும் .


இம்மந்திரத்தை சித்தி செய்யாமல் மந்திர பிரயோகம் செய்தால் அதன் அனுபவ முறைகளை  கூறுகின்றேன் .

ஏதாவது இடத்தில் பூஜை செய்து கொண்டிருக்கும் போது இந்த உடற்கட்டு போடாமல் பூஜைகள் செய்தால் அந்த போச்சி வெற்றியடையாது .அந்த தேவதைகளுக்கு தேவையான படையல் போடவில்லை என்றால் அது நம்மை தாக்கும் அதன் அறிகுறி அந்த நேரமோ அல்லது மறுநாள் காலையிலோ நமக்கு உலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து கண்டு பிடிக்கலாம் அதனை போக்க அதற்கான உச்சாடன மந்திரம் கொடுத்து அதை விரட்ட வேண்டும் .



இப்படி அனுபவத்தில் பல உள்ளன ஆகவே ஏதாவது புத்தகங்களை படித்து விட்டு மாந்திரீகம் செய்கிறேன் என்று முயற்சிக்க வேண்டாம் ஏனென்றால் அந்த மந்திரங்களில் எதிர் விளைவுகள் நமக்கு கிடைக்க இருக்கும் வெற்றிகளை தடை செய்யும் .அதனால் சரியானவர்களிடம் பயின்று பிரயோகம் செய்ய முயலுங்கள் .



மாந்திரீகம்




 ஜால வித்தைகள்

 

நிறைய மாந்திரீகர்கள் அக்காலத்தில் ஒரு சில ஜால வித்தை மட்டுமே படித்து வைத்து விட்டு நிறைய மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள்.


ஒருவருக்கு பேய் பிடித்திருக்கிறது என்று வைத்து கொள்ளுங்கள் அந்த நபரால் இந்த பேயை விரட்ட முடியாது .ஒரு சாதாரண பேயை விரட்டும் சக்தி கூட இந்த ஜால வித்தை காரர்களுக்கு இல்லாமல் போகின்றது .


ஒருவர் வந்து வீட்டில் அதிகம் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது என்று இந்த மந்திரவாதியிடம் கூறியிருப்பார் .இவர் என்ன செய்வார்.அந்த வீட்டிற்கு சென்று பார்க்க போவார் .வீட்டை பார்த்து விட்டு கூறுவார் .இந்த வீட்டில் செய்வினை வைக்கப்பட்டுள்ளது .அதை எடுக்க வேண்டும் அப்போது தான் உங்கள் வீட்டில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் நீங்கும் என்று கூறுவார் .



அவர்களுக்கு பிரச்சனைகள் தீர்ந்தால் போதும் என்று எவ்வளவு பணம் ஆகும் என்று கேட்ப்பார் அவரும் பெரிய யாக பூஜை போட வேண்டியிருக்கிறது மற்றும் மயானத்தில் போய் பூஜை போடா வேண்டும் அதனால்  20000 ரூபாய் ஆகும் என்று கூறுவார் .அவர்களும் பயமுடன் சரி உடனே செய்து விடுங்கள் என்று பணம் கொடுப்பார்கள் .



அவர் பூஜைக்கான பொருட்கள் எல்லாம் வாங்கி விட்டு யாகத்திற்கான மர சுள்ளிகளையும் கொண்டு வருவார் அந்த கம்பில் ஒன்றில் ஓட்டை போட்டு அதனுள் இரண்டு யந்திரத் தகடுகளை எழுதி உருட்டி வைத்து விடுவார் .



யாகம் செய்யும் பொது வீட்டுகாரர் இடமே இந்த கம்புகளை யாகத்தில் உங்கள் கைகளால் போடுங்கள் என்று கொடுப்பார் .அவர்களும் போடுவார்கள் அந்த கம்பில் தான் இவர்கள் வைத்த யந்திர தகடு இருக்கிறது என்று வீட்டுகாரர்களுக்கு தெரியாது .கடைசியில் யாகம் முடிந்தது அந்த யாக குண்டத்தில் தேடித் பார்ப்பார்கள் இரண்டு தகடுகள் வெளிவரும் .இதை வீட்டு காரரை அழைத்து இதோ பூஜை செய்து உனக்கு வைத்த செய்வினையை எடுத்து விட்டேன் .இந்த யந்திர தகடுகளை ஆற்றிலோ அல்லது கடலிலோ கொண்டு சேர்க்க வேண்டும் .என்று கூறி தகட்டை கொண்டு செல்வார்கள் .



இப்படித்தான் ஜால வித்தைகளை செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள் .

மாந்திரீகம் என்பது சித்தர்கள் மற்றும் முனிவர்கள் இறைவனின் அருளால் கண்டறிந்த ஒரு அரிய தெய்வீக கலை.மக்களின் வாழ்வில் ஏற்படும் சகல துன்பங்களை நீக்கி இன்பங்களை கொடுக்கும் அற்புத கலை.



இதன் பயன்பாடுகள் பற்றி சித்தர் நூல்கள், மாந்திரீகம்,மாயாஜால
வித்தைகள் போன்ற நூல்களில் உள்ளது.என்றாலும் இதனை அனுபவ முறையில் கையாண்டு
 வெற்றி பெற நன்கு தேர்ச்சி பெற்ற ஒரு குருவின் வழிகாட்டுதல் கண்டிப்பாகத் தேவை.  
இதனைஅனைவரும்அறிந்து கொள்ளும் ஒரு அரிய தகவலாகவே பதிவு
 செய்கின்றோம். மேலும் இம்முறைகளை கையாள விரும்புபவர்கள்

சுயநலத்திற்கு என்றில்லாமல் பொது நலத்தையும் அறிந்து பயன்படுத்த வேண்டுகிறோம்.