வெள்ளி, 12 ஏப்ரல், 2019

வாசியோக சந்தேகமும் நிவர்த்தியும்.! பாடம் 2

பாடம்


   நன்றி : யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி.

 

மாணவர் தகுதி இயமம் நியமம் என்ற மனித நேயமும் அன்பும் கடைப் பிடித்தல் அவசியம். 

 

வாசி யோகத்தில் பிரிவு உண்டா ?


வாசி யோகம் என்பதில் இரண்டு வகை உண்டு.

ஒன்று அடிப்படை வாசியோகம் அல்லது வாசியோகம்.

மற்ற ஒன்று வாசியை வலது இடமாக வாசித்தால் வரும் சிவயோகம். சிலர் இரண்டையும் குழப்பிக்கொள்கிறார்கள். சிவயோகம் யோகிகளுக்கு மட்டுமே. வாசியோகம் இல்லறத்தார்க்கும் செயல்படும்.

வாசி யோகம் யார் செய்யலாம் ?

வாசி யோகத்தில் பிராணாயாமம் என்பது நான்காம் அங்கம். இதில் வாசி உருவாக்கினால் அது வாசி பிராணாயாமம். இந்த வாசி பிராணாயமத்தில் மூலாதாரம் என்ற குதத்திற்கு மேல் இரண்டு விரல் அகலம் உயரே மனதைப் பதிய வைத்து வாசி யோகம் செய்தால் யாருக்கும் எந்த துன்பமும் வராது. எந்த வயதினரும் இதைச் செய்யலாம். இது மூச்சுக்காற்றை நெறிபடுத்துதல்

  இது அடிப்படை வாசி யோகம். அதுவாக கட்டுப்பாடு இல்லாமல் இயங்கும் மூச்சுக் காற்றை நெறிப்படுத்தினால் உடல் உறுப்புகள் சிவந்து இளமையுடன் இருக்கும்.முடி கருமையாக இருக்கும். இறைவன் நம்மை விட்டு நீங்கிப் போகமாட்டான். அடிப்படை வாசி யோகத்துடன் மூலிகை கல்பங்கள் உண்ணலாம்.

சிவயோகம் என்பது முப்பு என்னும் சாகா மருந்து உண்டு உயர் நிலை வாசி யோகம். பத்து ஆண்டு செய்வது. இதற்கு குரு உதவியும்,பல கட்டுபாடுகளும் உண்டு. இது மரணத்துக்கு ஒப்பான துயரம் தரும்.முடிவில் அழியா தேகமும் முக்தியும் தரும்.இது யோகிகளுக்கு மட்டுமே. இதில் மூன்று தீட்சை மூன்று ஆண்டு முடித்தால் சித்தர் தகுதி தரும். நான் முடித்து உள்ளேன்.எனக்கு சித்தர்களே குரு.

 மூலதாரத்தில் கால கணக்கோடு வாசியோகம் செய்து,குண்டலினி உருவாக்கி, மூலாதாரம், சுவாதிஸ்டானம்,மணிபூரகம்அனாகதம்விசுக்தி ஆக்ஞாஆகிய ஆறு தளங்களில் வாசியோகம் செய்து, மேலே ஏற்றி, குண்டலினியையும் மேலே ஏற்றி,பிடரி வழியாக ஒவ்வொரு தளமாக கீழே இறக்கி மூலாதாரம் அடையவேண்டும்.அப்பொழுது இரண்டு நாசி துவாரத்தின் வழியாகவும் வாசி யோகம் செய்ய வேண்டும். இத்தகைய வாசி யோகம் செய்பவர் யாரும் இல்லை.அப்படி செய்தவர் எமனை எட்டி உதைக்கும் தகுதி படைத்தவர்.இது சித்தர்களும்,யோகசித்தி அடைந்தவர் மட்டுமே செய்ய முடியும். இதை தினமும் நான் செய்கிறேன்.இதுவே சிவயோகம். இதை கற்றுக்கொள்ள குரு வேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவர் செய்யலாம்.

 அடிப்படை வாசி யோகம் செய்ய தீட்சை பெற வேண்டுமா ?

செய்முறை சொல்லி தருவதே தீட்சை.குரு என்பவருக்கு மாணவர் தட்சணை  தரவேண்டும்.குரு கற்று கொடுக்க வேண்டும்.இந்த வகுப்பில் நான் யாருக்கும் குரு இல்லை.வழி காட்டி. மாணவர் இயம நியமத்துடன் அன்புடன் இருப்பதே நான் கேட்கும் கட்டணம்.நான் வேறு கட்டணம் கேட்கவில்லை.நான் சொல்லித்தரும் செயல்முறைகளே தீட்சை. .விருப்பமுள்ளோர் சாங்கியம் வேண்டும் என்றால் உங்கள் வீட்டில் தீபம் ஏற்றி சித்தர் படம் வைத்து அல்லது சாமிபடம் வைத்து சித்தரிடம் வாசியோகம் கற்றுதர வேண்டி கொண்டு பயிற்சி ஆரம்பியுங்கள்.வாசி யோகம் சித்தர் சொத்து.என்னுடையது இல்லை.சித்தரிடம் வேண்டுங்கள்.

இல்லறத்தில் இருந்து கொண்டு வாசி யோகம் செய்யலாமா?

 நான் செய்யும் வாசி யோகமும், நீங்கள் செய்யும் வாசி யோகமும், வஷிஸ்டர்விசுவாமித்திரர்வியாச ரிஷிசுகர்,கக்கியர்.கும்பநாதர் என்ற அகத்தியர்,தெற்கு பக்கத்து சித்தர்கள்களும் செய்தார்கள்.இந்த யோகத்தைச் செய்து கொண்டு இல்லறவாழ்விலும் சிறப்பாக வாழ்ந்தார்கள்.

இல்லறத்தில் இருந்தாலும் முக்தி தானே .

 வாசி யோகம் செய்ய தியான மண்டபம்காடு,குகை போகவேண்டுமா ?

வேண்டாம்.வீடு போதும்.இந்த உடம்புக்குள் ஜோதி என்ற இறைவன் உண்டு. அவனை வீட்டில் இருந்து உடல் என்னும் கூட்டில் கண்டு முக்தி பெறலாம்.

வாசி யோகம் செய்தால் செல்வம் போய்விடுமா?

 இல்லை.அறவழியில் செல்வம் வரும்.வறுமை வராது.வந்த செல்வம் போகாது.

குரு தீட்சை கொடுத்தால் முக்தியும் சித்தியும் கிடைக்குமா ?

இல்லை.நீங்கள் தான் வாசியோகம் செய்து முக்தி அடையவேண்டும். சாஸ்திரங்கள் படித்தோகுரு தீட்சை பெற்றோ,மந்திரங்கள் ஓதியோ முக்தி  பெறமுடியாது.வாசி யோகம் செய்ய வேண்டும்.

இருபது வயதிற்கு கீழ் வாசி யோகம் செய்தவர் விரைவில் மரணம் அடைவாரா?

இருபது வயதிற்கு கீழ் சிவயோகம் செய்து முக்தி பெற்றவர் விரைவில் பரு உடல் இழப்பார்கள்.

ஐம்பது வயதிற்கு மேல் தான் வாசி யோகம் செய்ய வேண்டுமா?

கட்டாயம் இல்லை.எந்த வயதிலும் அடிப்படை வாசி யோகம் செய்யலாம். சிவயோகம் நாற்பது வயதிற்கு மேல் எண்பதுக்குள் செய்யலாம்.


உடற்பிணி இருப்பவர் வாசி யோகம் செய்யலாமா?

  முடிந்த வரை செய்யலாம்.முடியாவிட்டால் செய்யவேண்டாம்.

வாசியோகம் செய்ய பத்தியம் உண்டா?

இல்லை.சரிவிகித உணவு எதுவும் சாப்பிடலாம்.சிலருக்கு சர்க்கரை,உப்பு சத்து இருந்தால்,அதற்கான பத்தியம் காத்தல் நன்று.நாளடைவில் நோய் கட்டுப்படும்



வாசியோகம்..! பாடம் 1

பாடம் 1
மாணவர் தகுதி: இயமம், நியமம் என்ற மனித நேயமும் அன்பும் கடைப் பிடித்தல் அவசியம்.

நன்றி :  யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி.
வாசியோகம்  ஏன் செய்ய வேண்டும் .?
மனிதப் பிறவியில் ஒவ்வொருவரும் பெற வேண்டியது நான்கு சித்திகள்
1)        காய சித்தி: 
அழியும் உடலை அழியாமல் பாதுகாத்தல்.
2)        வேதை சித்தி:
ஒரு பொருளின் அணுத்தன்மையை மாற்றுதல், மதிப்பு குறைந்தவற்றை மதிப்பு மிக்கதாக மாறச்செய்தல்பயன்படுத்தல்அறவழி பொருள் ஈட்டல் ஆகியவை வேதை. சாகா மருந்து என்ற முப்பூ செய்து முடித்தல் வேதை சித்தி.
3)         யோகசித்தி : 
யோகா என்றால் இணைத்தல் என்று பொருள். பொருள்களை இணைத்து புதிய பொருள் பெறுவது வேதை. அழியும் உடலை அழியா உடலாக மாற்ற இறைவனோடு இணைத்தல் காய சித்தி. இறைவனோடு இணைந்து ஒன்றிப்போதல் ஞானம்.இம்மூன்றையும் பெறுவதற்கான தொழில் நுட்பம் சொல்வது யோகா.இதில் வெற்றி பெறுதல் யோகசித்தி.
4)         ஞான சித்தி:
இதுவே முக்தி. காய சித்திவேதை சித்தியோகசித்தி அடைய வேண்டும். தன்னுள் இறைவனை ஒளி வடிவில் கண்டுஇறைவனுடன் ஒன்றிநிலைத்த பேரின்பம் பெற்றுஇறைவனாக ஐந்தொழில் செய்தல்    (படைத்தல்காத்தல்அழித்தல்மறைத்தல்அருளல்).
  வாசியோகா :
யோகா என்பதில் பலவிதங்கள் உண்டு.இந்தியர்களின் யோகாவில் முக்கியமானவை:
 பக்தி யோகம் :  
இறைவனிடம் பக்தி செய்து முக்தி அடைதல்
ஹடயோகம் : 
 உடலைப் பேணி பலவித பிராணாயாமம் செய்து,பந்தனம்,முத்திரைகிரியை ஆகிய முறைகளைப் பின்பற்றி இறைவனை அடைதல்.
கர்ம யோகம்:  
நமது கடமைகளை விருப்பு வெறுப்பு இல்லாமல் இறைவனுக்கு அர்ப்பணித்து செய்தல். அதன் மூலம் இறைவனை அடைதல் .
வாசி யோகம் : 
 இதற்கு அஷ்டாங்க யோகம் குண்டலி யோகம்ராஜ யோகம் ஆகிய பெயர்கள் உண்டு. இதைச் சிறிது மாற்றி கிரியாயோகம் என்றும் சொல்லுவார்கள் .
வாசி யோகத்தில் எட்டு அங்கங்கள் உண்டு. அவை இயமநியமஆசனபிரணாயாம,பிரத்தியாகார, தாரண தியானசமாதி.
வாசி என்பது காலக் கணக்கோடுநெறிப்படுத்திய சுவாசம்இந்த நெறிப் படுத்திய சுவாசத்தைப் பயன்படுத்தி,குண்டலினி என்னும் சக்தியை உருவாக்கி அதை வாலையாக ஒளிரச் செய்வது. இந்த வாலை என்ற ஒளி தான் பூரணம் என்ற இறைவன். இந்த வாலை எல்லையற்ற சக்தி கொடுக்கும்.இந்தச் சக்திகள் சித்தி எனப்படும்.சித்திகள் 64 இருந்தாலும் 8 சித்திகள் அஷ்டமா சித்திகள் எனப்படும். அமிர்தம் என்ற சாகாசுரப்பை வாலைகொடுக்கும். இதுவே உடலை அழியாமல் காக்கும்.
வாசி யோகச் சிறப்பு:
உலகில் பலவிதமான யோகா நெறிகள் உண்டு. அந்தநெறி இந்த நெறி என்று எண்ணாமல் அட்டாங்கம் என்ற வாசி யோகா நெறியை கடைப்பிடியுங்கள். அதில் சமாதி நிலை அடையுங்கள். இதனால் ஞானம் அடையலாம். யாகம் போன்ற தவறான வழியால் இறைவனை அடைய முடியாது.
வாசியோகம் செய்வதால் யோகசித்தியுடன் காயசித்தி,வேதைசித்திஞானசித்தி கிடைக்கும். வாசி யோகம் செய்யாது பிற சித்தி அடைய முடியாது. அனைத்து சித்திகளுக்கும் வாசி யோகமே அடிப்படை.
 அட்டாங்க யோகம்:
அது பலித்திட அருளும் முக்தி. உறுதியான உடல் பெறஉயர்ந்த அறிவு பெறநிறைந்த சக்தி பெறஅறவழியில் நிறைந்த பொருள் ஈட்டநிறைவான இல்லறம் நடத்தஅமானுஷ்ய சக்தி பெற, உள்ளுறை இறைவனை அறியகாய சித்தி பெற,வேதை சித்தி பெறஞானம் சித்தி பெற வாசி யோகம் செய்தல் அவசியம். வாசி யோகத்தின் ஒவ்வொரு அங்கமாக பார்ப்போம்.படிப்படியாக வாசியோகம் செயல்முறை பார்ப்போம்.

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

நாசி துவாரங்களில் வாசி யோகம் பழகுதல்

 நாடி சுத்தி , பிராணாயாமம் வாசி யோகம் , வித்தியாசம் என்ன . ?
 

வாசி யோகத்தில்  இரண்டு நாசி சுவாசம் இடது நாசி சுவாசம், வலது நாசி சுவாசம்  ஒருநாசியில் உள்வாங்கி மறுநாசியில் வெளியிடல்  ஆகியவை ஏன் செய்ய வேண்டும் ?
 
நாடிகள் என்பது சக்தி ஓட்ட பாதைகள்.  நமது உடலில்  72000  நாடிகள் செயல் படுகிண்றன. 

இவை பத்து பிரதான நாடிகள் மூலம் கட்டு படுத்த படுகின்றன .. இந்த பத்து நாடிகளை மூன்று அதி  முக்கிய நாடிகள் கட்டுபடுத்துகின்றன .  அவை இடகலை, பிங்கலை, சுழிமுனை அல்லது குரு நாடி. அவற்றுள் சுழிமுனை நாடியை வாசி யோகம் மூலம் நாம் உருவாக்குகிறோம். 

 இடகலைபிங்கலை  ஆகிய நாடிகள்  நமது இடது நாசி  மற்றும் வலது நாசி துவாரம் வழி  இடதுபக்க செயல்பாடு வலது பக்க செயல் பாடு என  பிரித்து செயல்படுகின்றன. ஆயினும்   இடகலை என்ற சந்திரகலை 16  நாத கலை சக்தி கொண்டது.   பிங்கலை என்ற  சூரிய நாடி 12 விந்து கலை சக்தி கொண்டது .இதனால் நாத உயிர்சக்தி (positive life energy) மற்றும் விந்து உயிர் சக்தி ( negative life energy )  சமநிலை அடையவில்லை. 

 இதற்காக சுழிமுனை என்ற நாடியை வாசி யோகத்தில்  உருவாக்குகிறோம் . இதில் தாரக கலை என்ற 4 கலை சக்தி  (கிடைக்கும் )பெறும் பலம் கொண்டது. இதனால் இடகலை பிங்கலை சமநிலை பெற்று உடல் இளமையுடன்  அழியாமல்  இருக்கும். இந்த பிரபஞ்சத்தில் இருந்து 32 கலை  பெறப்படுகிறது.  இந்த உயிர் சக்தி நமது உடல் முழுவதும் பரவி உடலில் உருவாகும் 64 கலை சக்தியுடன் சேர்ந்து 96 கலை சக்தி உருவாக்கும் . இது அளப்பறி சக்தி . நிலை . இதுவே அணைத்து அபூர்வ சக்திகளுக்கும்  சித்திகளுக்கும் அடிப்படை. 
.
சாதரணமாக நாம் இரண்டு நாசியில் சுவாசிக்கிறோம்.அப்பொழுது நாத கலை !விந்து கலை 12 என்ற வித்தியாசத்தால் 4  கலை வீணாகிறது  இதை சமநிலை படுத்த ஒருநாசியில் சுவாசம் அடைபட்டு நிகழும் .அப்பொழுது குறைவான சக்தியே பெறப்படும் . உயர்ந்த சக்தி பெற வாசி யோகா ஆரம்பத்தில் மூச்சை நெறிப்படுத்த துவங்குகிறோம் . முதலி
ல் காலத்தை நெறிபடுத்தி இரண்டு நாசியிலும் சுவாசித்து  வாசி உருவாக்குகிறோம்இவ்விதம் .வாசிபழகுதல்  துயர் தராது.

அதன் பின் நாடிகளை நெறிபடுத்தி வாசியோகம் பழக வேண்டும்.அதற்கு 
  • முதலில் இரண்டு நாசியிலும் சுவாசித்து வாசிபழகுதல் வேண்டும்.
  • அதன்  பிறகு வலது நாசியில் யில் வாசி பழக வேண்டும் 
  • அதன்பின் இடது நாசியில் வாசி பழக வேண்டும்  . 
இவை நாடிசுத்தி எனப்படும் .
  • அதன் பின்  வலது நாசியில்  உள்வாங்கி கும்பித்து  இடது வெளியிடல்  
  • அதன் பின்  இடது நாசியில்  உள்வாங்கி கும்பித்து   வலது வெளியிடல்  என வாசி பழகவேண்டும் .
  இது பிராணயாமம்
 
 இப்படி  படிப்படியாக நாசியை பயன்படுத்தி வாசியோகம்  பழக வேண்டும் .
 அதன் பின் ஆதாரதளங்களில்  பிராணாயாமம் செய்து வாசியோகம்
பழக வேண்டும்.