வெள்ளி, 20 ஜூலை, 2018

துரிய நிலை தியானம்

துரிய நிலை தியானம் என்றால் என்ன ?

இது ஒரு உயர் நிலை வாசி யோகம் .
.
"
தண்னை தான் தான் அறிந்து பார்க்கும்போது
தத்துவமாய் நின்றதொரு தொண்ணுற்று ஆறு .".... யூகி முனி

இறைவன் 96 தத்துவங்களாக மாறி மனிதனாக இருக்கிறான் என்பதே "தான் ." அல்லது நான். இந்த 96 தத்துவங்களில் அவஸ்தை அல்லது அவஸ்தா என்பது உணர்வு நிலை . இந்த உணர்வு நிலை ஐந்து நிலைகள் கொண்டது .

1.
ஜாக்கிரதை அல்லது சுய உனர்வுநிலை அல்லது விழிப்பு நிலை.  

இந்த நிலையில் எல்ல உறுப்புகளும் செயல்படும். சுய உணர்வுடன் செயல் படுவீர்கள்

2.
சொப்னா அல்லது கனவுநிலை.  

தூங்கும் போது தூக்கமும் விழிப்பும் அற்ற நிலை . இங்கு கண், வாய், மூக்கு, செவி, உடல் ஆகிய பொறிகள் ஐந்தும் செயல்படாது. ஆனால் பார்த்தல், ருசித்தல், நுகர்தல்,கேட்டல், உணர்தல் ஆகிய புலன் ஐந்தும் செயல் படும்

3
சுழுத்தி ஆழ் நிலை தூக்கம்.  

பொறிகளும் புலனும் வேலை செய்யாது. ஆனால் உடலில் சக்தி நிரப்பப்படும். சக்தி நிரம்பியவுடன் மீண்டும் விழிப்பு அல்லது கனவு வரும்

4.
துரியம் :  

ஐம்புலன்கள் வேலை செய்யாது. சக்தி நிரம்பியபின் விழிப்பும் வராது. ஆணால் அதீத ர்வு என்ற பிறபஞ்ச உணர்வு நிலை உருவாகும். அப்பொழுது மூளையில் காமா அலை என்னும் சிறப்பு அலை உருவாகும். இது பிரபஞ்ச தொடர்பை ஏற்படுத்தும். இந்த அலை நிலையில் உள்ள பிற சித்தர் களுடன் தொடர்பு ஏற்படும். இந்த நிலை கோமா நிலையுடன் ஒப்பிடலாம். கோமா நிலையில் காமா அலை உருவாகாது. பிறபஞ்ச தொடர்பு ஏற்படாது . புற தோற்றத்தில் இரண்டும் ஓன்று போல் இருக்கும்

5.
துரியா தியானம் :  

இந்த நிலை இறந்தும் இற்வாது போன்ற நிலை. இந்த நிலை கண்டவர் விண்டது இல்லை. இது மௌனம் என்ற யோகநிலை. உணர்ந்து பார் என்று திரு மூலர் சொல்கிறார்

அஷ்டாங்க யோகம் அல்லது வாசி யோகத்தில் ஏழாவது அங்கம் தியானம். அஷ்டாங்க யோகத்தில் தியான நிலை அடைந்து அதில் துரிய அவஸ்தை அல்லது துரியா உணர்வுநிலை அடைவது துரியா தியானம். இந்த துரிய தியானத்தில் சித்தர்களுடன் பேச முடியும்.

2 கருத்துகள்: