பாகம்-1
பிறவி பயன்
என்பது ஞானம் அடைதல்.
திரு
மூலர் திருமந்திரத்தில், ஞானம் அடைவதற்கு நன்கு படிகளை சொல்லுகிறார் .
அவை
1 சரியை
2 கிரியை
3 யோகம்
4 ஞானம்
சரியை, கிரியை ஆகிய இரண்டும் பக்தி மார்க்கம். இறைவனை அறிய
எளிய
வழி.
ஆகையால் நம்மில் சிலர் தவிர
அனைவரும் பின்பற்றுகிறார்கள்.யோகம் ஞானம் சித்தர் வழி
முயற்சி வேண்டும். இவற்றை அடைய
நமக்கு வழிகாட்டுபவர்.
குரு வழிகாட்டல் மூன்று வகை
படும்.அவைகள்
1.லவ்கிக
குரு
2.பக்தி குரு
3.சித்தகுரு
லவ்கிக குரு,பக்தி குரு
ஆகியோர் சரியை கிரியைகளை சொல்லி கொடுப்பார்கள்.
குரு
என்பவர் யார்
1.லவ்கிக
குரு நமது தாயும் தந்தையும் தான்
முதல் இரண்டு குருக்கள். உலக
லவ்கிக வாழ்கை சிறக்க கற்று கொடுப்பவர் ,பள்ளி ஆசிரியர்கள் தொழில் கற்று கொடுபபவர் தொழில் நுட்பம் கற்று கொடுப்பவர்,வைத்தியம் சொல்லி தருபவர் என்று பலரும் நம் வாழ்வில் வளம்
சேர்கிறார்கள் . தீயவழி காட்டுபவர் குரு
இல்லை.
2.பக்தி குரு
2.1 கடவுள் மற்றும் தேவர்கள்.
2.2மனிதர்கள் கடஉள் மற்றும் தேவர் குருக்கள் 7 பேர்கள்.அவர்கள்
2.2.1 சிவ குரு = ஆதி
குரு
= தக்ஷன மூர்த்தி.
2.2.2 சக்தி குரு = சௌந்தர்யா பார்வதி
2.2.3 விஷ்னு குரு =வராத ராஜா
பெருமாள்
2.2.4 பிரம்மா குரு = பிரம்மா
2.2.5 ஞான குரு = முருகன் = சுப்பிரமணியர்
2.26 தேவ குரு =பிரஹஸ்பதி = வியாழன்
2.2..7அசுர குரு =சுக்கிரன்.
இந்த
7 குருக்களையும் திருச்சி அருகில் உள்ள
பிச்சண்டர் கோவில் என்ற
ஊரிலுள்ள உத்தமர் திருகோவிலில் வணங்கலாம் .
எல்லா சாதக
தோஷங்களும் நீங்கும். கல்வி, செல்வம், புத்திரன் பாக்கியம், வெற்றி, ஞானம் பெறலாம் ..
3. சித்தர் குரு
சித்தர் கல்விகள் கற்று கொடுப்பவர் சித்தர் குரு.
இவர்கள் யோகமும் ஞானமும் கற்று கொடுப்பார்கள். இவர்கள் நால்வகை படுவர்.
4.1 யோகா குரு
=வாசி
நிலை
கண்டவன்
4.2 வேதை குரு
= முப்பூ செய்தவன்
4.3 சித்த குரு
= வாசிநிலை கண்டு,முப்பூஉண்டு ,தசதிக்ஷ்சை செய்து அமித்தம் உண்டவன் .
4. 4 ஞான குரு = மௌன
யோகம் செய்து சமாதி கைகூடி கெவுணம் பாய்ந்த சித்தன் சித்த குருக்க்களை கண்டு பிடித்தல் கடினம் . திரு
மூலர் பாடலில் கூறிய வழி.
சித்த குரு
என்பவர் , மூக்கில் கை
வைக்காமல் இடகலை , பிங்கலை கலீல் பூரித்து, கும்பித்து ரேசித்தல் ஆகியவற்றை தனது
விருப்பம்போல் செய்பவர் .. அகத்தியர் ஞானம் 30 வில்
சித்தகுரு கற்று கொடுப்பவைகளை சொல்லி உள்ளார் .
பாகம்-2
இங்கு.பக்தி குரு
வகைகள் பார்ப்போம். பக்தி யோகத்தை சரியை கிரியை என்று பிரிப்பார்கள் . இவைகள ஞானமார்க்கத்தில் முதல் இரண்டு படிகள். எனவே
பக்தி குருக்கள்
1.சரியை குரு
2.கிரியை குரு
என
இருவகை படுவர் 1.சரியை குரு
இறைவனின் திரு
ஸ்தலம் , திர்த்தம் , மூர்த்தி பற்றி சொல்பவர் . அங்கு செய்ய வேண்டிய பூஜைகள், பின்பற்றும் முறைகள் பற்றி சொல்லுவார்.கடவுள் உபதேசங்கள் , நீதி
உபதேசங்கள் ,பாடல்கள் கூறுவர் ..ஐய்யப்பா குருக்கள் மற்றும் கோவில் பூஜை
செய்பவர்கள் , சரியை குருக்களே . . குருவுடனோ அல்லது குரு
இல்லாமலோ இறை
வணக்கம் .செய்பவர் சரியையோன் . இது
ஞானத்தின் முதல்படி.நம்மில் பெரும்பாலோர் சரியையோன் . 2 கிரியை குரு
ஓவ்வொரு தெய்வங்களுக்கு செய்யவேண்டிய யாகங்கள் மந்திரம்கள் யந்திரங்கள் செய்வர் . தோசங்கள் களிப்பார்கள் . கும்பாபிசேகம் செய்வர் . இவர
கிரியை குரு
. இ
த்தகைய கிரியை செய்யும் பக்தர் கிரியையோன் .சரியை கிரியை ஆகியவை இய்ம
நியமம் என
அஷ்டாங்க யோகத்தில் முதல் இ
ரண்டு அங்கங்கள் . எல்லா மத
குருக்கலும் இய்ம
நியமம் பற்றி போதிக்கிறார்கள் . எச்சரிக்கை !! குருக்களில் போலி
குருக்கள் உண்டு ..சித்தர் காக
புசுண்டர் போலி
குரு
பற்றி பாடியதை வாசி
அறிந்தவன் பதிவில் சொல்லி உள்ளார்.
பாகம் -3
1.லவ்கிககுரு
2.பக்தி குரு
அல்லது ஆன்மீக குரு
ஆகியோர் லௌகிக வாழ்விற்கும் பக்தி யோகா
வழிக்கும்
3.சித்தகுரு சித்த மார்கத்துக்கும் வழி
காட்டு வர்கள் . இந்த
குருக்களின் ரூபம் எது
அரூப
குரு
2. உருவ குரு
என
இருவகை படுவர் !
1அரூப குரு
1.1 இறைவன் = சித்தர் எல்லாவற்றிற்கும் முதன்மையான ஆதி
குரு
இறைவன். இறைவன் , தியானத்தில் அசரிரி மற்றும் நிழற்படமாக உபதேசிக்கிறார் . இவ்
விதமாக பெறப்பட்ட உபதேசங்கள் பத்து கட்டளைகள் ,குரான் , போகர் 7000, அகத்தியர் அந்தரங்க திக்ஷ விதி
மற்றும் பல
சித்தர் நூல்கள் . சித்தர்களும் இப்படி உபதேசம் செய்து வருகிறார்கள் .. சிலர் இந்த
அனுபவம் பெற்று உள்ளனர் . எனக்கு இந்த
அனுபவம் உண்டு . கனவு
நிலையில் நிழற் படங்களாக உபதேக்கிறார்கள் ..பலருக்கு இந்த
அனுபவம் உண்டு.
1.1.2வாலை குரு வாசி
யோகத்தில் பெறப்படும் ஒளி
பூரணம் அல்லது வாலை.
வாலை
கண்டவர்க்கு வாலை
வழிகாட்டி
1.2 ஊடக குரு
எழுத்து வடிவில் சொல்லப்படுவது . பட்டினத்தாருக்கு இறைவன் ஓலை
சுவடிஇல் எழுதியது "கா தந்த
ஊ
சியும் கூட
வராது கடை
வழிக்கே " சித்தர் நூல்களில் இப்படி கட்டளைகள் உபதேசங்கள் சொல்ல்வதுண்டு . இந்த
உபதேசங்கள் யாருக்கு விளங்க வேண்டுமோ அவருக்கு புரியும் . . அகத்தியர் ஞானம் 30 வில்
எனக்கு கட்டளை இடப்பட்டு உள்ளது . அதை
அகத்தியர் ஞானம் 30 பதிவில் காணலாம் .. சித்தர் நூல்களில் சில்ல இடங்களில் குரு
இல்லத பேர்களுக்கு இந்த
நூலே
குரு
என
சொல்லுவார்கள் . இது
போன்று பல
உபதேசக்கள் செய்வார்கள் . உங்களுக்கும் ஊடக
குரு
உங்கள் கேள்விக்கு நிச்சயமாக விடை
சொல்வர் நீங்கள் இக்கட்டான சூழலலில் இறைவன் அல்லது சித்தரிடம் வழி
கேடக
வேண்டும் என்றால் , அப்பொழுது செய்ய வேண்டியது . கீதை
,பைபிள் , குரான் போன்ற தெய்வீக நூலை
எடுத்து கொண்டு பிரார்த்தனை செய்து வேண்டுங்கள் .பின்பு . கண்களை மூடிக் கொண்டு எதாவது ஒரு
பக்கத்தை திறந்து பாருங்கள். அதில் உங்களுக்கான விடை
இருக்கும் . நானும் பல
நண்பர்களும் அனுபவித்து அறிந்த உண்மை . செய்து பாருங்கள் நல்லது நடக்கும் . சிலர் அருள் வாக்கு சொல்வதும் இது
போன்றுதான் .
2. உருவ குரு
2,1இயற்கை குரு
. இறைவனே இப்ப்பிரபஞ்சமாக உள்ளான். அவன்
இயற்கை உருவில் கற்று கொடுத்து கொண்டே இருக்கிறன் . அறிவு உடையவர் கற்கிறார்கள் .
2.2.மனித குரு
2.2.1. உலகு அறிந்தகுரு
2.2.2 மா னசிக குரு
2.2.3 பிரசன்னா குரு
2.2.1. உலகு அறிந்தகுரு மனிதர்கள் குருவாக இருப்பது எல்லோரும் அறிந்த ஒன்று . ஒருவற்கு பல
குருக்களும் பலருக்கு ஒரு
குருவும் இருப்பார்கள் . 2.2.2 மா னசிக
குரு
ஒருவர் மனதில் ஒருவரை நினைத்து கொண்டு புத்தக அல்லது வேறு
வடிவிலோ கற்பார்கள் . ஏகலைவன் எடுத்து காட்டு.
2.2.3 பிரசன்ன குரு எதிர்பாரத விதத்தில் எதிர்பாரா உருவில் உபதேசம் செய்பவர் . சங்கரர் சன்யாசம் பெற்ற புதிதில் சாதி
வேறுபாடு கடைபிடித்தார் . ஒருநாள் கங்கைஇல் குளித்விட்டு சாமி
தரிசனம் செய்ய நடந்து வந்தார் . அப்பொழுது ஒரு
புலையர் அழுக்கு உடையுடன் மற்றும் உடலுடன் வந்து சங்கரரை இடித்தார் . சங்கரர் "நீ விலகு" என்றார் புலையர் "நீ என்பது இந்த
உடலையா அல்லது ஆன்மாவா "என்றார் .மறைந்துவிட்டார் . சங்கரற்கு "எல்லா உயிர்கலும் இறைவனின் மறு
உருவே " என்ற ஞானம் பிறந்தது.
|